states

img

மேஜிக் காலண்டர்

சிவகங்கையைச் சேர்ந்த ஓவிய கலைஞர் கலைமகள் முத்துகிருஷ்ணன் என்பவர் மேஜிக் காலண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். குதிரை, யானை, சிங்கம், பறவைகள், நடனப்பெண், ஸ்பைடர்மேன் போன்ற கிராபிக்ஸ் ஓவியங்களில் கோடுகள் போட்ட பிலிம்கொண்டு படத்தின் மேலே நகர்த்த அவை உயிர் கொண்டது போல் நடக்க, ஓட ஆரம்பி்த்து வியப்பைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் அணு, அஞ்சல் அட்டை அறிவியல் இதழின் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது என்று கலைமகள் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.