states

சாலை விபத்தில் ஏழு பேர் பலி

ஜெய்ப்பூர், ஆக.13-  இராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் நாகௌரில் உள்ள தங்களது உறவினர் வீட்டின் திருமண விழாவில் கலந்து கொள்ள  காரில் சென்றனர். கார் சென்று கொண்டிருந்தபோது, பந்தாரி கிராமத்தில் ஒரு வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக எதிர் திசையில் வந்த பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் சிக்கி காரில் பயணம் செய்தவர்களில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக  அனுப்பி வைத்தனர். உயிரிழந்த வர்கள் ஷாருக் (22), சதாம் (28), முஹமது தோகிட் (15),  முஹமது ஜூபர் (18), ஆசிப் (30), முஹமது (17) மற்றும் முஹமது ரஷீத் (வயது 24) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.