பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை உத்தரவாதப்படுத்துக: சிபிஎம்
சென்னை, டிச.27- சேலம் மாவட்டம் விருதா சம்பட்டியில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை உத்தரவா தப்படுத்த வேண்டும் என்றும் தீண்டாமைக்கு எதிராக தொடர் நடவடிக்கை தேவை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: சேலம் மாவட்டம், விருதாசம் பட்டியில் அமைந்துள்ள சக்தி மாரி யம்மன் கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதையொட்டி, வரு வாய்த்துறை அதிகாரிகள் கோவி லுக்கு பூட்டு போட்டுள்ளார்கள். சாதி அடிப்படையில் வழிபாட்டு உரிமையை மறுத்து, தீண்டாமை கடைப்பிடிப்பது எந்த விதத்திலும் ஏற்க முடியாததாகும். அரசு இவ் விசயத்தில் தீவிரமாக தலையிட்டு, அனைத்து மக்களுக்கும் சமமான உரிமையை உறுதி செய்ய வேண் டும்
என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலி யுறுத்துகிறது. சக்தி மாரியம்மன் கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. அண் மையில் கோயில் புதுப்பிக்கப் பட்டு, குடமுழுக்கு விழா திட்டமி டப்பட்ட நிலையிலேயே அனைத்து மக்களுக்கும் வழிபாட்டு உரிமை யை உறுதி செய்ய வேண்டும் என்ற பிரச்சனை முன்னுக்கு வந் தது. கடந்த காலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலை யில், அந்த நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அரசு அதி காரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பேச்சுவார்த்தையில், முடிவு எட் டப்பட்ட நிலையில், குடமுழுக்கு சமயத்தில் சிறப்பு பூசையின் போது வழிபாட்டு உரிமை தடுக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறையும் கோவிலுக்கு பூட்டுபோட்டுவிட்டார்கள். தமிழ்நாடு அரசு இந்த பிரச்ச னையில் உறுதியோடு செயல் பட்டு, தீண்டாமைக் கொடுமைக்கு முடிவுகட்ட வேண்டும், பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை உத்தரவாதப்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.