states

ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ ஏன்?: கே.எஸ்.அழகிரி

சென்னை, செப். 5- ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலி னிடம் தேசியக் கொடியைப் பெற்றுக் கொள்ளும் ராகுல் காந்தி மாபெரும் பொதுக் கூட்டத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க உரையை  நிகழ்த்துவார்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராகுல்காந்தி இந்த பயணத்தை மேற் கொள்ளும் போது கிராமங்கள், சிறு நகரங்கள், பெருநகரங்கள் வழியே நடந்து  சென்று மக்களைச் சந்தித்து துயரங்களைப் புரிந்து கொண்டு, அவர்களது பிரச்சனை களுக்குத் தீர்வு காண்கிற முயற்சியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவை கண்டுணருகிற முயற்சியே இந்திய ஒற்றுமைப் பயணம். பொருளாதார ரீதியாக பார்க்கிறபோது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள். ஏழைகள் மென்மேலும் ஏழைகளாகிக் கொண்டிருக்கிறார்கள். வானத்தைத் தொடும் அளவிற்கு விலை வாசி உயர்வு. விவசாயிகளும், கூலித் தொழி லாளர்களும் கடனில் மூழ்கிப் போகியிருக் கிறார்கள்.  சலுகைகளைப் பெற்று வரும்  பெரும் முதலாளிகளிடம் நம் நாட்டின் சொத்து கள் பெருத்த நட்டத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றன. சாதி, மதம், மொழி, உணவு, உடை ஆகியவற்றின் அடிப்படையில் சமூகரீதியாக மக்கள் பிளவுபடுத்தப்படுகிறார்கள். ஓர்  இந்தியன் தன்னுடைய சக இந்தியனு டன் சண்டையிட்டுக் கொள்ள வேண்டுமென் பதற்காகவே புதுப்புது சதித் திட்டங்கள் தினந்தோறும் உருவாக்கப்படுகின்றன.

பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வு அதிகரித்துள்ளது. பிளவுபடுத்தப்பட்ட சமூ கத்தால் வலிமையுடன் இருக்க முடியுமா? அரசியல் ரீதியாக மக்களின் குரல்  இன்றைக்கு ஒடுக்கப்படுகிறது. நமது  அரசியல் சாசன உரிமைகள் நசுக்கப்படு கின்றன. உயர் அமைப்புகளைச் சிதைப்ப தற்கும், ஜனநாயகத்தை கேலிக்குறியதாக்கு வதற்கும் நமது ஒற்றுமையை, சகோத ரத்துவத்தை அழிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கிய உரிமை கள் மறுக்கப்படுகின்றன. அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியல் என்பது ஒன்றிய,  மாநில அரசுகளுக்கு பொதுவானது. ஆனால், ஒன்றிய அரசு பொதுப் பட்டி யலை கபளீகரம் செய்து மாநில உரிமைக ளைப் பறிக்கிறது. இந்தியாவின் சுதந்திரம், இறையாண்மை, அரசமைப்புச் சட்டம், ஜன நாயக அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டு மானால் இந்திய ஒற்றுமை பயணத்தில் அனைவரும் இணைய வேண்டுமென்று அழைக்கிறோம். இந்தப் பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி திருவள்ளுவர் சிலை, விவேகா னந்தர் பாறை, காமராஜ் மண்டபத்திற்கு சென்ற பிறகு காந்தி மண்டபத்தில் தலைவர்  ராகுல் காந்தியிடம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை வழங்குகிறார். இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித் தார்.

;