states

தனியார் பால் 6 ரூபாய் உயர்வு

சென்னை, அக். 17- தமிழகத்தில் ஆவின் நிறுவனம் தினசரி சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. இவை 16 விழுக்காடு  நுகர்வோரின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது. மீதமுள்ள 84 விழுக்காட்டி னர் தேவையை தனியார் பால் விற்பனை யாளர்களே பூர்த்தி செய்து வருகிறார்கள். பால் கொள்முதல் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதால் தனியார் பால் விலையும் உயர்த்தப்படுகிறது. சமீப காலமாக கால்நடை தீவனப் பொருட்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் ஹெரிடேஜ், ெஜர்சி, ஆரோக்கியா  ஆகிய 3 தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வரு கின்றன. இந்த ஆண்டு இதுவரை 3 தடவை பால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 4ஆவது முறையாக 3 தனியார் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன. இந்த பால் விலை  உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.  2 மாதங்களுக்கு பிறகு பால் விலையை அதிகரித்துள்ள தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ.6 வரை விலையை  உயர்த்தியுள்ளன. ெஜர்சி, ஹெரிட்டேஜ் நிறுவனங்கள் பால் விலையை தலா ரூ. 6 மற்றும் ரூ.4 என்ற விகிதத்தில் உயர்த்தி  இருக்கின்றன. ஆரோக்கியா நிறுவனம் லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பதாக அறிவித் துள்ளது. இதனால் ஆரோக்கியா பால் லிட்டர்  ரூ.59இல் இருந்து ரூ.61ஆக உயர்ந் துள்ளது. ெஜர்சி, ஹெரிட்டேஜ் நிறுவனங்க ளின் பால் விலை ரூ.70 மற்றும் ரூ.72ஆக உள்ளது. தனியார் நிறுவனங்கள் பால்  விலையை உயர்த்தியுள்ள போதிலும் ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்த வில்லை. அதற்கு பதில் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.  தனியார் நிறு வனங்களின் பால் விலைக்கும், ஆவின் நிறுவனத்தின் பால் விலைக்கும் தற்போது லிட்டருக்கு 22 ரூபாய் வித்தியாசம் உள்ளது.