states

தீக்கதிர் விரைவு செய்திகள்

இந்தியில் ‘எம்பிபிஎஸ்’: அமித் ஷா துவக்கி வைக்கிறார்

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில், நாட்டிலேயே முதன்முறையாக இந்தியில் மருத்து வக் கல்வி பயிலும் முறை தொடங்கப்பட உள்ளது. ஒன்றிய  உள்துறை அமைச்சர் அமித்  ஷா, அக்டோபர் 16-ஆம் தேதி இதனை தொடங்கி வைக்கிறார். மருத்துவக் கல்வி முதலாம் ஆண்டுக்கு, இந்தி மொழியிலான பாடப் புத்தகங்களையும் அவர் வெளியிடுகிறார். இதற்கான அறிவிப்பை மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ளார். “இந்தி மொழி  தெரிந்தவர்கள் தாய்மொழி மூலமாக படித்து முன்னேற வாய்ப்பாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார். 

முலாயமிற்கு பாரத ரத்னா: சமாஜ்வாதி கோரிக்கை

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82), கடந்த திங்களன்று காலமானார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு, சமாஜ்வாதி கட்சி செய்தித் தொடர்பாளர் ஐ.பி. சிங் கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார். அதில், ஆக்ரா - “லக்னோ விரைவுச் சாலையை, முலாயம் சிங் யாதவ் விரைவுச் சாலை என்று பெயர் மாற்ற வேண்டும்; சமூக நீதிக்காகவும், தேச நலனுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்த முலாயம் சிங் யாதவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி ஊடகங்களை சந்திக்காத கோழை!

உலகம் போற்றும் தலைவரான பிரதமர் மோடியை அரசியலில் குழந்தையான ராகுல் காந்தி  விமர்சிப்பதா? என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கேள்வி எழுப்பி யிருந்தார். அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். அதில்,  ‘கோழை நரேந்திர மோடி’யை, முதலில் பத்திரிக்கையாளர்களை நேரடியாக சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கச் சொல்லுங்கள்... அதற்குத் தயாரா?” என்று சவால் விடுத்துள்ளார்.

எனக்கு மரியாதை இல்லை; சசி தரூர் ஆதங்கம்!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூர் எம்.பி., காங்கிரஸ் கமிட்டி அலு வலகங்களில் மற்றொரு போட்டியாளரான கார்கேவுக்கு கிடைக்கும் வரவேற்பு தனக்கு கிடைப்பதில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார். ‘மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் பலர் மல்லிகார்ஜுன கார்கேவை வரவேற்கின்றனர். ஆனால், என்னை வரவேற்பதில்லை. எனினும், இந்த வரவேற்பு ஒன்றும் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை” எனவும் சசிதரூர் விரக்தியாக குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் செல்லும் 70 ஒன்றிய அமைச்சர்கள்

“ஜம்மு - காஷ்மீருக்கு சுமார் 70 ஒன்றிய அமைச்சர்கள் வருகை தர உள்ளனர். இந்த யூனி யன் பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் அரசுத் திட்டங்களின் அமலாக்கத்தை அவர்கள் ஆய்வு  செய்ய உள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் தங்கள் துறை சார்ந்த வளர்ச்சித் தேவைகளை அவர்கள் நேரடியாக மதிப்பீடு செய்ய உள்ளனர். அந்த மதிப்பீட்டின்படி, திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன’ என்று ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் அனுப்ரியா சிங் படேல் காஷ்மீரில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பொய்களை சுட்டிக்காட்டுவதே அவதூறா?

“தன்னை (மோடி) துஷ்பிரயோகம் செய்வதற்கு, காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மியை அவுட் சோர்ஸிங் செய்துள்ளது என்று பிரதமர் அழுகிறார். அது முற்றிலும் தவறு. முதலாவது, நாங்கள் துஷ்பிரயோகம் செய்வதில்லை. ஒவ்வொரு முறையும் பிரதமரின் வாயிலிருந்து வரும் பொய்களை மட்டுமே நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். இரண்டாவது, மோடியை துஷ்பிரயோகம் செய்வதற்கு அவரது இனத்தை (பொய்யர்) சேர்ந்த ஜூட்ஜீவியை அவுட்சோர்ஸ் செய்ய மாட்டோம்” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

போலிச் சான்று :  ஓட்டுநர் - நடத்துநர்  பணி நீக்கம்

சென்னை, அக்.13- அதிமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 2011 முதல் 2015 வரை போக்குவரத்து துறையில் ஓட்டுநர்,நடத்துவர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு அதிகமாக ஆட்கள் எடுக்கப்பட்டன. அப்போது சிலர் போலிச் சான்று கொடுத்து வேலைக்கு சேர்ந்து மோசடி  செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்க இயக்குனரகத் தின் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அந்த காலக் கட்டத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஆவணங்கள் பெறப்பட்டன. அதன்படி 12 பேர் போலிச் சான்றிதழ் கொடுத்து பணி யில் சேர்ந்தது தெரிய வந்தது.இவர் களில் 8 பேர் ஓட்டுநர்கள், 2 பேர்  உதவி பொறியாளர்கள், நடத்துனர்கள் உள்பட 2 பேரும் இதில் அடங்குவர். இதையடுத்து அவர்கள் 12 பேரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.

வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் க.பொன்முடி!

சென்னை,அக்.13- சென்னை அம்பத்தூரில் கடந்த  மாதம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் க.பொன்முடி பேசும்போது, அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம்  செய்வது தொடர்பாக சில கருத்துக்களை பேசினார். `இதில் யாராவது, யார் மனமா வது புண்பட்டு இருக்குமானால் உண்மை யாகவே நான் வருந்துகிறேன். நான் யாரையும் புண்படுத்த வேண்டும்  என்று பேசவில்லை. அது கலோக்கிய லாக பேசுகிற ஒரு வார்த்தை தான் என்று சென்னை பெரியார் திடலில் நடந்த  நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மாணவி சத்யா கொலை: 7 தனிப்படைகள் அமைப்பு

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த சதீஷ் என்பவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார் சார்பில் 4 தனிப்படையும், பரங்கிமலை சரகம் சார்பில் 3 தனிப் படையும் அமைக்கப்பட்டுள்ளது.

ரேசன் கடைகளுக்கு 1043 ஊழியர்கள் நேரடியாக நியமனம்

சென்னை, அக்.13- கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைக ளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்ப கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் அடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளுக்கு ஊழியர்கள் தேர்வு  செய்யப்படுகிறார்கள்.  4 மாவட்டங்களிலும் மொத்தம் 1043  பேர் பணியில் நியமிக்கப்பட இருக்கிறார் கள். இந்த பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு  விண்ணப்ப கட்டணம் போன்ற விவரங் கள் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. சென்னை மாவட்டத்தில் 48  விற்பனையாளர்கள் 296 கட்டுனர் பணி யிடங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 114 விற்பனையாளர், 160 கட்டுனர்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 157 விற்பனையாளர் 21 கட்டுனர்கள், திரு வள்ளூர் மாவட்டத்தில் 198 விற்பனை யாளர்கள், 39 கட்டுனர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணையதளம் வழி யாக பெறப்படுகின்றன. நவம்பர் 14 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள்  விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது.

சின்னவெங்காயம் விலை உயர்வு

ஈரோடு மாவட்டம் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு தோறும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்ன  வெங்காயம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோவை, பொள்ளாச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப் படுகின்றன. மேலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயத்தின் விலை  கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளர்.

புதிய தடுப்பணைகள்: தமிழக அரசு ஆலோசனை

சென்னை,அக்.13- தமிழ்நட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தலை மையில் வியாழனன்று (அக்.13) சென்னை யில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத் துறை  அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  தமிழகத்தில் மொத்தம் உள்ள 124.94 லட்சம் வீடுகளில், 69.50 லட்சம் (55.63 விழுக்காடு) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது தேசிய சராசரியான 53.96 விழுக்காட்டை விட அதிகமாகும். இந்த ஆண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டிற்கு தமிழகத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கு 12.10 லட்சமாகும். இலக்கை விட அதிகமாக 16.25 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு சாதனை எண்ணிக்கையை அடைந்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டு இலக்கு 28.48 லட்சம். இதுவரை 16.51 லட்சம்  குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட் டுள்ளன. மீதமுள்ள குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது எனவும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நதி நீரினை உபயோகிக்கும் மாநிலங்க ளில், தமிழகம் கீழ்ப்பகுதியில் உள்ள மாநில மாகும். எனவே, குடிநீர் திட்டங்களின் நிலைத் தன்மையை உறுதி செய்ய சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி நிலத்தடி நீரை மேம்படுத்த சிறப்புத் திட்டத்தைக் கோரவும், ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டு தல், முக்கிய ஆறுகளில் ஓடும் உபரிநீரை  பயன்படுத்தி அருகிலுள்ள நீர்நிலைகளில் நிரப்பி நிலத்தடி நீராதாரத்தை பெருக்கு தல் போன்ற சிறப்புத் திட்டங்களை செயல் படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

 


 

 

;