states

பிரதமர் மோடி ஒப்புதல் வாக்குமூலம் மாநில மொழிகளில் சட்டத்தை எழுத உபதேசம்

கேவாடியா, (குஜராத்), அக்.15-  அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு புதுதில்லியில் தொடங்கியது. கேவா டியாவில் உள்ள ஏக்தா நகரில் சனிக்கிழமை மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:- “ நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது” என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் மோடி, மக்கள் எதிர்கொள்ளும் சவால்களில் இதுவும் ஒன்று என்றார். சட்டங்கள் தெளிவாக எழுதப்பட வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி ஏழைகளிலும் ஏழைகளாக உள்ளவர்கள் சட்டத்தை புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த மாநிலங்களின் மொழியில் அவை எழுதப்படவேண்டும் என்றார்.  நீதி கிடைப்பதில் உள்ள தாமதத்தை போக்க  ஆலோசனைகளையும் வழங்கிய அவர், இந்திய சமூகத்தின் மிக பெரிய சிறப்பு என்னவெனில், வளர்ச்சிக்கான பாதையில் நடைபோ டும்போது, உள்நாட்டு சீர்திருத்தங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். காலாவதியான சட்டங்களையும், மரபுகளையும் நமது சமூகம் தாமாகவே முன்வந்து அகற்றியது என்றார். சட்டங்கள் பிராந்திய மொழிகளில் எழுதப்படவேண்டுமென பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், உயர்நீதிமன்றங்களில் தீர்ப்புகளும் வழக்க றிஞர்கள் விவாதங்களும் ஆங்கிலத்தில் தான் உள்ளன.

;