சென்னை, மார்ச் 29- கருவறை தீண்டாமையை ஒழித்திட துண்டறிக்கை விநியோகித்த சிபிஎம், தீண் டாமை ஒழிப்பு முன்னணியினரை தாக்கி யதை கண்டித்துள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தாக்குதல் நடத்திய அதி முக நிர்வாகி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு மாநிலப் பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: திருச்சி வயலூர் முருகன் கோயிலில் நிய மிக்கப்பட்ட பார்ப்பனரல்லாத 2 அர்ச்சகர் களின் பணியைப் பறித்து வெறும் நம்பிக் கையைக் காரணமாக்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு அரசியல மைப்புச் சட்டத்துக்கும்,சமூகநீதிக்கும் ஏற்பு டையதல்ல என்பதே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கருத்தாகும். எனவே தான் இத்தீர்ப்பைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மார்ச் 22 அன்று மதுரையில் மாபெரும் கண் டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மத்திய சென்னை மாவட்டக்குழுக்கள் இதே கோரிக்கையுடன் துண்டறிக்கை வெளியிட்டு மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வரு கிறது. இதன்படி மார்ச் 28 அன்று ராயப் பேட்டை நாகத்தம்மன் கோயில் அருகே துண்ட றிக்கை விநியோகம் செய்தபோது அங்கு வந்த அதிமுக முன்னாள் வட்டச் செயலாளர் நரசிம்மன் துண்டறிக்கை கொடுத்துக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் இளங் கோவை தாக்கியுள்ளார். தடுக்கச் சென்ற சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் கவிதா கஜேந்திரனை ஆபாசமாகப் பேசி தாக்க முனைந்துள்ளார். ஜனநாயக முறையில் துண்டறிக்கை விநியோகம் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கி றது. இவ்வாறு தாக்குதல் நடத்தியவர் மீது காவல்துறை உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை யை மேற்கொள்ள வேண்டும். 2021 ஆகஸ்ட் 14 அன்று 4 பட்டியல் இனத்தை சார்ந்தவர் உள்பட 28 பேர்களை அர்ச்சகராக நியமிக்கப்பட்டதற்கு எதிராகத் தான் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே கருவறைத் தீண்டாமையை ஒழித்து, சமூகநீதியைக் காத்திட தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும். அனைத்து ஜனநாயக இயக்கங்களும் இதற்குக் குரல் எழுப்பிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.