சென்னை, செப். 25- பொறியியல் படித்து முடித்த மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஐடி நிறுவனங் கள் வேலைக்கு எடுப்பது குறைந்து வரும் நிலையில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் புதிய பாடப் பிரிவுகளை அறிமுகம் செய்கிறது. ஒருகாலத்தில், பொறியியல் கல்லூரி களுக்கே நேரடியாக வந்து கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி பெரும்பாலான மாணவர்களை ஐடி நிறுவனங்கள் தேர்ந்தெடுத்தன. பெரிய அள வில் திறமை இல்லாத மாணவர்களை கூட கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்து பணிய மர்த்தி வேலைக்கான பயிற்சியை ஐடி நிறுவனங்கள் அளித்து வந்தன. ஆனால், தற்போது அந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. கேம்பஸ் இன்டர்வியூவை ஐடி நிறு வனங்கள் அடியோடு குறைத்துவிட்டன. அப்படியே கேம்பஸ் இன்டர்வியூ நடத்தினா லும், மிகவும் திறமையான மாணவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நடைமுறையை ஐடி நிறுவனங்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டன. அது மட்டுமல்லாமல், படிக்கும் போதே தொழில் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும் என்றும், டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட், டேட்டா மைனிங், டேட்டா மாடலிங் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் ஐடி நிறு வனங்கள் எதிர்பார்க்கின்றன. அதாவது, வெறும் பொறியியல் டிகிரி வைத்திருக்கும் மாண வர்கள் தங்களுக்கு தேவையில்லை என்ற முடி வுக்கு பெரிய ஐடி நிறுவனங்கள் வந்துவிட்டன. இந்நிலையில், ஐடி நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு மாணவர்களின் திறமையை வளர்க்க வேண்டிய கட்டாயம் பொறியியல் கல்லூரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் அதற்கான நடவடிக்கையில் இறங்கி விட்டது. அந்த வகையில், புத்தம் புது பாடப் பிரிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்த உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 320க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இந்த பாடப் பிரிவுகள் அறிமுகமாகின்றன. அதன்படி, கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரிங், எலக்டி ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் உள்ளிட்ட படிப்புகளை தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு, மூன்றாம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி), மெஷின் கற்றல் (எம்எல்) ஆகிய பாடப் பிரிவுகள் கொண்டு வரப்படும். இந்த பாடப்பிரிவுகளை பொறியியல் மாணவர்கள் ஆறாவது, ஏழாவது செமஸ்டரில் கட்டாயம் படிக்க வேண்டும். இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொறியியல் படிப்புகளை தேர்வு செய்துள்ள மாணவர்கள் டேட்டா அறி வியல், புல் ஸ்டேக் டெவலப்பெண்ட், கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி, ஏஐ மற்றும் எம்எல் ஆகிய படிப்புகளில் ஏதாவது இரண்டை கட்டாயம் தேர்வு செய்து படிக்க வேண்டும். இந்த பாடப்பிரிவுகள் தொழில் நிபுணர்கள் மூலம் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் கற்பிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு படிக்கும் போதே தொழில் திறன் வளர்ந்துவிடும் என்பதால் எளிதாக அவர்களுக்கு ஐடி துறையில் வேலை கிடைக்கும் என்றும் அவர் கூறினார். இந்த படிப்புகளை அடுத்த செமஸ்டர் முதல் அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தும் என வேல்ராஜ் தெரிவித்தார்.