தங்கம், லேப்டாப் கடத்தல்
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கை யில் ஈடுபட்டிருந்தபோது, துபாயில் இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்து, அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அதில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 38 லேப் டாப்கள் இருந்தன. மேலும் ஒருவரிடம் இருந்த செல்போன் பேட்டரியை சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்த்த போது அதில் தங்க தகடுகள் இருந்தன. பின்னர் 3 பேரையும் சோதனை செய்ததில், உள்ளா டைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.59 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
குஜராத்தில் மோடி பிரச்சாரம்
182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் மாநில சட்டசபை க்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8 அன்று வாக்குகள் எண்ணப்படு கின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வல்சாத் மாவட்டம் கபர்தாவில், தனது பிரச்சாரத்தை தொடங்கினார். ஞாயிறன்று சோம்நாத் மாவட்டம் வெராவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், முந்தைய தேர்தல் வாக்குப் பதிவு சாதனையை முறியடிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
4 பேர் சுட்டு கொலை
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் பாக்மரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெனிதிஹ் நிலக்கரி சேமிப்பு பகுதியில், சனிக்கிழமை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் நிலக்கரியை திருடுவதை பார்த்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் நிலக்கரி திருட்டை தடுத்தனர். அப்போது நிலக்கரி திருடர்கள் திடீரென தாக்கத் தொடங்கியதை அடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பேர் கொல் லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர்.
கம்போடியா பயணம்
ஆசியான் அமைப்பு நாடு களை சேர்ந்த பாதுகாப்பு அமை ச்சர்களின் 9 ஆவது வருடாந்திர கூட்டம் கம்போடியாவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக நவ.22 அன்று கம்போடியா செல்கிறார். நவ.23 அன்று ஆசியான் பாதுகாப்புதுறை அமை ச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
பத்திரிகையாளர் அமைப்புகளை கண்காணிக்கும் ஒன்றிய அரசு
புதுதில்லி, நவ.20- பத்திரிகையாளர் அமைப்பு கள், சங்கங்கள் மற்றும் மாநாட்டு மையங்கள் உட்பட அனைத்து நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் உட் செயல்பாடுகளை கண்கா ணிப்பதற்காக, அவற்றின் விவரங்களை ஒன்றிய பிர தமரின் அலுவலகம் மற்றும் அமைச்சகங்கள் சேரிக்க முயற்சி மேற்கொண் டுள்ளன. இதற்கு தில்லி பத்தி ரிகையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பத்திரிகை சுதந்திரம், பத்திரிகையாளர்களின் பிரச்சனைகள், கருத்தரங்கு கள் மற்றும் விவாதங்கள் நடத்தும் அமைப்புகளின் செயல்பாட்டில் தலையிடா மல் இருப்பதை உறுதி செய் யுமாறு அரசாங்கத்தை தில்லி பத்திரிகையாளர் சங் கம் கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட பத்திரிகை சங் கங்கள் மற்றும் அமைப்பு கள் மீது மட்டும் ஒன்றிய அரசு இலக்கு வைப்பதற்கு தில்லி பத்திரிகையாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
இராமேஸ்வரம், நவ.20- வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி யுள்ளதால் மீனவர்களுக்கு தொலை தூர எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஞாயிற் றுக்கிழமை ஏற்றப்பட்டுள் ளது. இதனால் மீன்பிடிக்கச் செல்வது இரண்டாவது நாளாக தடை செய்யப்பட் டுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர் வாடி, தொண்டி, சோளிய குடி உள்ளிட்ட பகுதியில் மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன்பிடிக்கச் செல் லாமல் முடங்கி உள்ளனர்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நியாயமாக நடத்த பாமக வலியுறுத்தல்
சென்னை, நவ.20- பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் தலைவர், துணைத்தலை வர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிக்கு தகுதியான மருத்து வர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இந்தத் தேர்தல் நியாயமாக நடைபெறுமா என்பது குறித்து மருத்துவர்களி டையே பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவர்கள் எழுப்பிவரும் ஐயங்கள் சரியானவை என்று நம்புவதற்கு தேவை யான காரணங்கள் இருப்பதை மறுக்க முடியாது. தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் 92,198 மருத்துவர்கள் மட்டும்தான் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் பதிவு பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை 1.60 லட்சத்திற்கும் கூடு தலாக இருக்கும். அவர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தேர்த லில் வாக்களிக்க தகுதியானவர்களில் சுமார் 70 ஆயிரம் பேரை தவிர்த்து விட்டு மீதமுள்ளவர்களை மட்டும் வைத்துக் கொண்டு தேர்தல் நடத்து வது நேர்மையானதாகவோ, அனைவருக்கும் சமவாய்ப்பு அளிப்பதா கவோ அமையாது என்பதுதான் மருத்துவர்களின் புகார். மருத்துவக் கவுன்சில் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தேவையான திருத்தங்களை ஆன்லைன் மூலம் செய்ய அனுமதிக்கும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில், அதற்கான தேர்தலையும் ஆன்லைன் முறையில் நடத்த முடியும். அதை செய்ய மருத்துவக் கவுன்சில் முன்வரா தது ஏன்? அந்த அமைப்பின் நிர்வாகிகள் மிகவும் நேர்மையான முறை யில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமித்து, ஆன்லைன் முறையில் வாக்களிக்கும் வகை யில் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் தொண்டர்களாக ஆளுநர்கள்: திருமாவளவன்
வேலூர்,நவ.20- பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் ஆர்எஸ்எஸ் தொண்டர்களாக பணியாற்றி வருகிறார்கள் தொல்.திரு மாவளவன் குற்றம்சாட்டினார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,“ஆளுநர் அரசிய லமைப்புச் சட்டத்தின் படி நியமிக்கப் பட்டவர். மாநில அரசுகளுக்கு உதவுதற் கான தான் ஆளுநர்கள் நியமிக்கப்படு கிறார்கள். ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கு இணைப்புப் பாலமாக ஆளுநர் இருக்க வேண்டும். மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் தான் ஆளுநரே தவிர ஆளுநர் எடுக்கும் முடிவுக்கு மாநில அரசு கட்டப்பட்டதல்ல”என்றார். தமிழக ஆளுநர் மட்டும் அல்ல பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து ஆளுநர்களும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி தருகின்றனர். இந்தியாவில் ஆளுநர்கள் ஆர்எஸ்எஸ் தொண்டர்களாக பணியாற்றி வருகிறார்கள். ஆளுநர்கள் அரசி யல் பேசலாம், ஆனால், ஒரு இயக்கத்தை சார்ந்த அரசியல் பேசக்கூடாது, இங்குள்ள ஆளுநர்கள் ஆர்எஸ்எஸ் அரசியலை பேசுகின்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக இருப்பதால் எதிர்க்கிறோம் என்றும் அவர் கூறினார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உட்பட 6 பேரின் விடுத லையை எதிர்த்து ஒன்றிய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவால் 6 பேர் விடுவிக்கப்பட்டதை தடுக்க முடியாது. சீராய்விலும் 6 பேரின் விடுதலையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்யும் என நம்பு கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தேவநேயப் பாவாணர் பேத்தி மரணம்: முதல்வர் இரங்கல்
சென்னை, நவ.20- தேவநேயப் பாவாணர் பேத்தியின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள இரங்கல் செய்தியில், “தம் வாழ்வையே தனித்தமிழ் இயக்கத்துக் காகத் ஒப்படைத்துக்கொண்டு பணி யாற்றிய ‘திராவிட மொழிநூல் ஞாயிறு’ தேவநேயப் பாவாணரின் பேத்தி பரி பூரணம், முதுகுத் தண்டுவடப் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மொழி ஞாயிறு பாவாணரின் குடும்பத்தார் மற்றும் தமிழார்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறேன்”என்று தெரிவித்தி ருக்கிறார்.