சென்னை,ஜூலை 7- சென்னை அருகே செம்மஞ்சேரி, குந்தம்பாக்கம், வண்டலூர் ஆகிய மூன்று இடங்களில் மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது என கண்டறியப்பட் டுள்ளது. ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ எனும் மெகா விளையாட்டு நகரத்தை நிர் மாணிக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்தது. சர்வ தேச தரத்தில் அமையவுள்ள இந்த விளையாட்டு நகரத்தின் ஆயத்த பணி களை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தொடங்கியுள்ளது. இந்த விளையாட்டு நகரத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள் ளன. மேலும், சர்வதேச அளவில் போட்டிகள் நடைபெறும்போது வெளி நாட்டு வீரர்கள் வந்து செல்ல வசதி யாக சென்னை விமான நிலையத் துக்கு அருகே இந்த விளையாட்டு நகரத்தை அமைக்கவும் அரசு திட்ட மிட்டிருந்தது. இங்கு நீச்சல் வளாகம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடங்கள், ஹாக்கி ஸ்டேடியம் என 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்கு கள் அமையவுள்ளன.
மேலும், இந்த வளாகத்தில் வீரர் கள் தங்கி பயிற்சி எடுக்கும் வகையில் பயிற்சிக் கூடங்கள், தங்கும் அறைகள், பணியாளர்களுக்கு குடியிருப்புகள், உணவகங்கள், ஓடுதளங்கள் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய ஒப்பந்த புள்ளிகள் மூலம் நிபுணர் குழுவை நிய மிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நடை பெற்ற அரசின் முத்திரைத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைய உள்ள இடங்கள் தொடர் பாக அறிக்கை அளிக்குமாறு முதல்வர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான ஆய்வுக் கூட்டம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலை மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள 3 இடங்கள் குறித்த அறிக் கையை சிஎம்டிஏ அதிகாரிகள் வழங்கி னர். அதன்படி, செம்மஞ்சேரி, குந்தம் பாக்கம், வண்டலூர் ஆகிய 3 இடங்க ளில் மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.