திண்டுக்கல், பிப்.26 திண்டுக்கல்லில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக ‘சிறு பான்மையினர் வாழ்வியல் புரிந்துணர்வு பயிற்சி முகாம்’ நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்டு தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வாழ்த்திப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ஒன்றிய பாஜக அமைச்சரவையில் ஒரு சிறுபான்மையினர் கூட இடம்பெறவில்லை என்பது சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. இந்தி யாவில் இஸ்லாமிய மக்கள் 30 கோடி பேர் உள்ளனர். 14 விழுக்காடு உள்ள இந்த மக்களுக்கு இவ்வளவு பெரிய ஜனநாயக நாட் டில் அமைச்சரவையில் ஒரு துணை அமைச்சர் பதவி கூட இல்லை என்பது எப்படிப்பட்ட சிறு பான்மை நலனாக இருக்க முடியும்? எல்லோ ருக்கும் வளர்ச்சி எல்லோருக்கும் முன்னேற்றம் என்று சொல்கிறார்கள். ஆனால் சிறுபான்மை மக்களுக்கான உரிமைகள் ஒலிப்பதற்கான இடம் கூட அவர்கள் கொடுக்கவில்லை. மக்கள வையில் 3ல் இரண்டு மடங்கு பெரும்பான்மை பாஜகவுக்கு இருக்கிறது. அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை. சிறுபான்மை யினரை ஒதுக்கி வைப்பதை பாஜக ஒரு அர சியல் கொள்கையாகவே வைத்துள்ளது.
உதவித் தொகை நிறுத்தம் பெரும்அநீதி
சச்சார் கமிட்டி அறிக்கையில் இஸ்லாமியர் களின் கல்வி, தொழில், வியாபாரம் போன்ற வற்றில் சிறுபான்மையினருக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை ஆதாரங்களுடன் கொடுத்து உள்ளனர். பட்டியலின மக்களைவிட மோசமான நிலையில் உள்ளனர் இஸ்லாமியர்கள். எனவே அவர்களுக்கு சில தனிப்பட்ட திட்டங் கள் இயற்ற வேண்டும் என்று மௌலானா அபுல் கலாம் ஆசாத் பெயரில் கல்வி உதவித்தொகை கொடுத்தார்கள். நமது தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 84 கோடி ரூபாய் வந்தது. பி.எச்.டி., எம்.பில் படிக்கும் மாணவர்களுக்கு தனி யாக ஒரு கல்வி உதவித் தொகை வந்தது. வெளிநாடுகளில் சென்று படிக்கிற சிறு பான்மை மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வந்தது. இந்த ஆண்டு ஒன்றிய சிறு பான்மை நலத்துறை அமைச்சராக உள்ள ஸ்மிருதி இரானி அனைத்து கல்வி உதவித் தொகைகளையும் நிறுத்திவிட்டார். தமிழ் நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மனுக்கள் அனுப்பினோம். ஆனால் திட்டம் நிறைவேற்றப் பட்டதாகக் கூறி இந்த கல்வி உதவித்தொகை கிடையாது என்று அறிவித்துள்ளார்கள். சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் குடிநீர் திட்டம், கழிவு நீர் ஓடைத்திட்டம் அமைப்ப தற்காக ஒரு சிறப்பு உட்கூறு திட்டம் அறிவிக்கப் பட்டது. அந்த திட்டத்தையும் நிறுத்திவிட்டார் கள். சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் அனைத்தையும் ஒன்றிய பாஜக அரசு நிறுத்திவிட்டது.
சௌராஷ்டிரா மக்களுக்கு குறி
தமிழ்நாட்டில் உள்ள சிறிய சிறிய கட்சி களைக் கைப்பற்றி தேர்தலுக்காக அவர்களை மடைமாற்றம் செய்திட, அரசு அதிகாரத்தை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியுமோ, அவ்வ ளவு தூரம் பாஜகவினர் பயன்படுத்துவார்கள். தமிழ்நாட்டில் சௌராஷ்டிரா மொழி பேசுகிற மக்களை ஒரு வாக்கு வங்கியாக பார்த்து அந்த வாக்கு வங்கியை அப்படியே கைப்பற்ற வேண்டும் என்று அவர்கள் எங்கெல்லாம் வாழ்கி றார்களோ, அவர்களை குஜராத் அமைச்சர்கள் நேரடியாக வந்து அழைத்துச்செல்கிறார்கள் என்ற தகவல் வந்தது. இது சமூகத்தை மேலும் மேலும் பிளவுபடுத்துகின்ற ஒரு முயற்சி. அந்த மக்கள் சௌராஷ்டிரா மொழி பேசலாமே தவிர, அவர்கள் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வாழ்ந்து, தமிழ்நாட்டில் தொழில் செய்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிற தமிழர்கள். தமிழ் நாட்டில் உள்ள ஏழரைக் கோடி மக்களும் தமி ழர்கள். நாம் அதை வேறுபடுத்தி பார்க்கவில்லை சௌராஷ்டிரா மக்கள் ஏமாந்து போவார்கள் என்று நினைத்தால் பாஜகதான் ஏமாந்துபோகும். மக்களை மொழிவாரியாக பிரிப்பது, மக்க ளை சாதிவாரியாக பிரிப்பது, பூகோள ரீதியாக பிரிப்பது. இவை எல்லாம் சனாதனத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி. அந்த சனாதன சூழ்ச்சி வெற்றிபெறாமல் இருப்பதற்காகத்தான் சமூக நீதியில் நம்பிக்கை கொண்ட கட்சிகள் மாநில உரிமை யில் நம்பிக்கை கொண்ட கட்சிகள், மதநல்லி ணக்கத்தில் நம்பிக்கை கொண்ட கட்சிகள், சமத்துவ பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்ட கட்சிகள் மற்ற அரசியல் வேறுபாடு களைக் கடந்து ஒரே தளத்தில் இணையவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இப்பேட்டியின் போது தமுஎகச மாநில தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், மாநில பொதுச்செயலாளர் ஆதவன்தீட்சண்யா, மாநில துணைத்தலைவரும் திரைக்கலைஞருமான ரோகிணி ஆகியோர் உடனிருந்தனர். (ந.நி.)