சென்னை, டிச.23- தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதத்தை தேசிய பேரிடர் என அறிவிக்க இயலாது என்றால், தேசிய பேரிடர் மேலா ண்மை ஆணையம் எதற்கு உள் ளது? என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் கே.பால கிருஷ்ணன் கூறியதாவது:
ஒன்றிய பாஜக அரசு வழக்க மாக கொடுக்க வேண்டிய நிவாரண நிதி சுமார் ரூ. 450 கோடி கொடுத் துள்ளது. அதில் கூட 10 விழுக்காடு நிதியை நிவாரணமாக தர முடி யும். எஞ்சிய தொகையை கட்டு மானப்பணிக்குதான் செலவிட முடியும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதத்தை தேசிய பேரிடர் என அறிவிக்க இயலாது என நிதியமைச்சர் கூறுகிறார். அப்படியென்றால் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எதற்கு உள்ளது என்ற கேள்வி எழாதா?
நிரந்தர தீர்வு
சென்னையில் ஏற்படும் பேரி டர்களை தவிர்ப்பத ற்கு, எதிர் கொள்வதற்கு சென்னையில் உள்ள கட்டமைப்புகளில் எத்த கைய மாற்றத்தை செய்ய வேண் டுமென்று ஒரு வல்லுநர் குழுவை அமைத்து, பரிந்துரைகளை பெற்று அரசுக்கு வழங்க உள் ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில் வரு மாறு:
2015-2022 ஆண்டு வரை ஒன்றிய அரசிடம் மாநில அரசு ரூ. 1.25 லட்சம் கோடிநிவாரணமாக கேட் டது. ஆனால் 4.5 விழுக்காடுதொகையை மட்டுமே கொடுத்துள் ளது. இதையெல்லாம் மறைத்துவிட்ட மக்களை ஏமாற்ற ஒன்றிய நிதிய மைச்சர் முயற்சிக்கிறார். தமிழ்நாட்டு மக்களை மாநில அரசுக்கு எதிராக திசைதிருப்ப முயற்சிப்பது பகல்கன வாக அமையும்.
தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த, கட்டமைப்பு வசதிகளை ஒன்றிய அரசுதான் மேம் படுத்த வேண்டும். வானிலை ஆய்வு மைய தகவலின் அடிப்படையில்தான் அரசு செயல்பட முடியும்.
நிவாரண நிதியை விரைந்து கொடுக்க வேண்டு மென்று அழுத்தம் கொடுப்பதற்காக, ஆதங்கத்தோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி னார். ஒன்றிய அரசு நிதியை கொடுத்தி ருந்தால் அதே அமைச்சர் பாராட்டி இருப்பார்.
2015ல் ஏற்பட்ட வெள்ளம் நிர்வாக கோளாறால் ஏற்பட்ட பேரழிவு. 2023ல் ஏற்பட்ட வெள்ளம் அளவுக்கதிகமான மழைபொழிவால் ஏற்பட்டது. 2015 மழை வெள்ளத்தையும், 2023 பேரிடரை யும் ஒப்பிடுவது பொருத்தமற்றது.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிவாரணம் பெரும்பகுதி மக்களிடம் சென்றுள்ளது. ஒன்றிய அரசு நிதியை கொடுத்தால், மாநில அரசிடம் நிவார ணத்தை உயர்த்தி கேட்போம். ஒன்றிய பாஜக அரசு நிதி கொடுக்காது, ஆனால், மாநிலத்தில் நிவாரணத்தை உயர்த்தி வழங்க கோருகிறது. இது குழந்தை யை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டு வதுபோல் உள்ளது. பாஜக தலை வர்கள் மாநில அரசு கோரும் தொகை யை பெற்று தர வேண்டும்.
ஒன்றிய அரசு அதிகாரிகள் அரசியல் இல்லாமல் நேரடியாக பார்வையிட்டு மாநில அரசின் நிவாரணப் பணிகளை பாராட்டுகிறார்கள். ஒன்றிய நிதி அமைச் சருக்கும், பாஜக தலைவர் அண்ணா மலையும் அரசியல் உள்நோக்கத்தோடு குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழ்நாடு, ஒன்றிய அரசுக்கு அதிக ளவு வரி செலுத்துகிறது. ஒன்றிய அரசு பாரபட்சத்தோடு தமிழகத்திற்கு குறை வான வரி பங்கீடு வழங்குகிறது என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் பாஜக அரசு செயல்படுகிறது.
அமைச்சர் பொன்முடி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குறித்த சர்ச் சைக்குள் செல்ல விரும்பவில்லை. கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது. உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கி யுள்ளது. உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கும். மூத்த அமைச்சர் ஒருவருக்கு தண்டனை கிடைத்தி ருப்பது சிறுபின்னடைவு, சிறுதடை தான். முன்னாள் அமைச்சர்கள், ஒன்றிய அமைச்சர்கள் மீது கூட வழக்கு உள்ளது. அதுகுறித்தெல்லாம் பாஜக தலைவர் அண்ணாமலை பேச மறுப்பது ஏன்?
நாடாளுமன்றத்தில் அத்துமீறல் குறித்து முழு விசாரணை நடத்த வேண் டும், உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க கோரிய எதிர்க்கட்சி எம்.பி.க் களை தற்காலிக நீக்கம் செய்துவிட்டு, மசோதாக்களை நிறைவேற்றி இருப்பது கண்டனத்திற்குரியது. அது வரை நாடாளுமன்றத்திற்கு வந்து பதிலளிக்காத உள்துறை அமைச்சர், அனைவரையும் வெளியேற்றிவிட்ட பிறகு வந்து மசோதாக்களை நிறை வேற்றுகிறார். பாஜக நாடாளுமன் றத்தை கையாளும் முறை அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தி கற்றுக் கொள்ளவே கூடாது என்று யாரும் கூறவில்லை. கட்டாயப் படுத்தக் கூடாது, திணிக்க கூடாது என்றுதான் கூறுகிறோம். எனவே, நிதிஷ்குமார் இந்தியை கட்டாயப் படுத்தினார் என்று கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பி னர் பி.சம்பத் ஆகியோர் உடனிருந்த னர்.