states

தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு இடமாகி விட்டது!

கருத்தரங்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பேச்சு

மும்பை, செப்.26- நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், கடந்த ஆறேழு ஆண்டுகளில் தேர்தல் ஆணையத்தின் நேர்மை பெரும் கேள்விக்குறியாகி விட்டது; நீதித்துறை, ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட முடிய வில்லை. விசாரணை அமைப்புகள் ஆட்சி யாளர்களின் ஏவல் அமைப்புகளாக மாறி  விட்டன என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார். மும்பையில், மராத்தி நாளிதழ் ஏற்பாடு செய்த கருத்தரங்கு ஒன்றில், ‘’ஜனநாய கத்தின் முன் உள்ள சவால்கள்’’ என்ற தலைப்பில் பிரசாந்த் பூஷண் பங்கேற்று பேசியுள்ளார். அதில் அவர் மேலும் பேசி யிருப்பதாவது: “கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல்  ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தே கத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. தேர்தல்  ஆணையம் நியாயமாகத்தான் நடந்து  கொள்கிறதா? என்ற கேள்வி எழுந்துள் ளது. ஏனென்றால் ஆளும் கட்சியை சேர்ந்த பெரிய தலைவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் போது வாய் மூடி தேர்தல் ஆணையம் மவுனம் காக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலை வர்களுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த பாரபட்சத்தை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.

டி.என்.சேஷன் தலைமை தேர்தல் ஆணையரான பிறகு பல ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் நியாயமாகவும் பார பட்சம் இன்றியும் நடந்து கொண்டதை நாம்  பார்த்தோம். ஆனால், கடந்த ஆறு முதல்  ஏழு ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்  தின் நேர்மை பெரும் கேள்விக்குறியாகி யுள்ளது. தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணை யம் எப்போது முடிவு செய்யும் என்று முன்  பெல்லாம் அரசுக்கே தெரியாது. ஆனால்,  தற்போது, ஆளும் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளே தேர்தல் எப்போது நடக்கும் என்று சொல்கின்றனர். சுதந்திரமான தேர்வுக்குழு இல்லை. இவர்கள் குறிப்பிடும் தேதியைத்தான் தேர்தல் ஆணையமும் அறிவிக்கிறது. தேர்தல் ஆணையம் இனி யும் நியாயமாக இருக்காது. ஏனென்றால், தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் அரசாங்கத்தாலேயே தேர்வு செய்யப்படு கின்றனர். இதற்கென சுதந்திரமான தேர்வுக்குழு இல்லை.

தற்போது அரசு என்ன செய்கிறது என்றால் தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் பலரும் குஜராத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களும் அரசாங்கம் சொல்வதை கேட்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஜனநாயகத்தின் முன்  னுள்ள பிரச்சனையாக இதுவும் உள்ளது.  சட்டம் மற்றும் நிர்வாகத்தை வரம்புக்குள் வைத்திருக்கவும் அடிப்படை உரிமை களை பாதுகாக்கவும் நீதித்துறை உருவாக்  கப்பட்டது. ஆனால், தற்போது இது எதுவும் நடப்பதில்லை என்பதை நாம் பார்த்து வரு கிறோம். அரசுக்கு எதிராக பேசுபவர்கள்  தேசத்துரோக வழக்கை எதிர்கொள்கின்ற னர். சில நேரங்களில் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் போலியான வழக்குகளும் போடப்படுகின்றன. இத னால், பல ஆண்டுகளுக்கு ஜாமீன் கூட  கிடைப்பதில்லை. இது அப்பட்டமாக நடக்கி றது. இதற்கு எதிராக நமது நீதித்துறை செயல்பட முடியவில்லை. இதன் மூலம், நீதித்துறையின் சுதந்திரமும் அச்சுறுத்த லுக்கு உள்ளாகியுள்ளது. ஊடகமும் அர சால் கட்டுப்படுத்தப்படுகிறது. காவல்துறை அமைப்புகளும் அரசியலுக்காக பயன் படுத்தப்படுகின்றன. தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் முற்றிலும் ஆளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதனால், ஜனநாயகம் உண்மை யான அச்சுறுத்தலில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் முறை கேடுகள் நடைபெறுவதற்கான சாத்தி யங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே பல நாடுகளும் மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாறியதை போல இங்கும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும். ஜனநாயகத்தின் முன் உள்ள இந்த சவால்களை சமாளிக்க, பல்வேறு சீர்திருத்  தங்கள் தேவைப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்ப தால் இதுபோன்ற சீர்திருத்தங்கள் அவர்  களால் மட்டும் செய்துவிட முடியாது. மக்கள் தங்கள் குரல்களை தற்போது எழுப்ப வேண்டும். லோக்பால் மசோதா விற்கு குரல் கொடுத்ததை போல நியாய மற்ற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மக்கள் குரல் கொடுக்கலாம். வேலை வாய்ப்பின்மை, பொதுத்துறை நிறுவனங்  கள் தனியார் மயம் உள்ளிட்ட பிரச்சனை களுக்கு எதிராக மக்கள் பெரும் போராட் டத்தை முன்னெடுக்க வேண்டும். இது எதிர்க்கட்சிகளையும் பலப்படுத்தும்.” இவ்வாறு பிரசாந்த் பூஷண் பேசி யுள்ளார்.

;