சென்னை,செப்.6- விலைவாசி உயர்வுக்கு காரணமான பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் கொள்கை களைக் கண்டித்தும் வேலை யின்மையால் வாடும் இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அகில இந்திய அளவில் இன்று (செப்டம்பர் 7) ரயில் மறியல், ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறுகிறது. லட்சத்திற்கும் மேற்பட் டோர் பங்கேற்புடன் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி யில் 500-க்கும் மேற்பட்ட மையங்களில் இப்போராட் டம் நடத்தப்படுகிறது. இதற் கான பிரச்சாரம் செப்டம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை தீவிரமாக நடைபெற்றது. தென்சென்னையில் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், வடசென்னை யில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மத்திய சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், திருவாரூரில் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.