states

அவசரகால தேவை என்ற பிரிவை பயன்படுத்தி மக்களிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தியது தவறு

மதுரை, செப்.23-  தஞ்சாவூரில் விமானப்படை பயிற்சி மையம் அமைக்க நிலம் கொடுத்த வர்களுக்கு, மாற்று இடம் கொடுக்க,  அவசரகாலத் தேவை என்ற  அடிப்படையில் நிலம் கையகப் படுத்தப்பட்டது தவறு என்று உயர்நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பளித்துள் ளது. தஞ்சாவூரில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்திற்கு தேவையான நிலங்களை அரசு ஏற்கனவே கையகப்படுத்தி உள்ளது. அவ்வாறு கையகப்படுத்திய நிலங்களை,  விமான நிலையத்திற்காக உபயோகப்படுத்து கிறது. அந்த விமான பயிற்சி மை யத்திற்கு நிலங்களை கொடுத்தவர்கள் மாற்று நிலம் கேட்டனர். அவ்வாறு நிலம் கொடுத்த வர்களுக்கு நிலம் கொடுப்பதற்காக, அருகில் ஏற்கனவே முறைப்படி குடியிருக்கும்  குடியிருப்பு வாசிகளிட மிருந்து நிலம் கையகப்படுத்த தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர், அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். குடியிருப்பு வாசிகளிடம்  நிலம் கையகப்படுத் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் அவசர உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் சார்பில் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும்  தனி நீதிபதி நிஷா பானு முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அதில் எமர்ஜென்சி கிளாஸ் அவசரகால தேவை என்ற அடிப் படையில் நிலம் கையகப்படுத்தப் பட்டது தவறு என்று உத்தரவிட்டார்.  இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை நீதிபதிகள் சுந்தர், ஸ்ரீமதி அமர்வு முன்பு வெள்ளியன்று நடைபெற்றது.  அப்போது மனுதாரர் தரப்பில், மாவட்ட ஆட்சியர்  எமர்ஜென்சி கிளாஸ் அதாவது அவசரகால நிமித்தம் என்ற அடிப்படையில் நிலம் கை யகப்படுத்த போட்ட உத்தரவு செல் லாது. அதுபோல விமானப்படை பயிற்சி மையத்திற்கு, நிலம் கொடுத்தவர் களுக்கு,  மாற்று இடம் கொடுப்ப தற்காக,  முறைப்படி வசித்து வரும் மற் றொரு குடியிருப்பு வாசிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்துவது ஏற்பு டையது அல்ல என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட றிந்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்த செப்டம்பர் 23 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தஞ்சாவூரில் விமானப் படை பயிற்சி மையம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு, மாற்று இடம் கொடுக்க, அவசரகால தேவை   என்ற அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப் பட்டது தவறு.  அவசரகால தேவை என்ற பிரிவை பயன்படுத்தி, உரிய முறைப்படி அங்கு  குடியிருந்து வரும் குடியிருப்பு வாசிகளிடமிருந்து, நிலத்தை பறிப்பது தவறு  என்ற தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.