states

மத உணர்வுகளை வியாபாரமாக்கக்கூடாது தனிநபர் நடத்தும் கோவில் இணையதளங்களை முடக்கி, குற்றவியல் நடவடிக்கை எடுத்திடுக!

மதுரை,அக்.11- மக்களின் மத உணர்வுகளை வியாபாரமாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை,  கோவிலின் பெயரில்  தனிநபர் நடத்தும் இணைய தளங்களை முடக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்கண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடுத் தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் 60 ஆம்  கல்யாணம் மற்றும் பல வைபவங்கள் மிகவும் பிரசித்தி பெற்ற முறையில் நடைபெறும். இந்நிலையில் இந்த கோவிலின் சிறப்பு பூஜைக்கு வரக்கூடிய நபர்களை மோசடி செய்யும் விதமாக இந்த கோவி லின் பெயரில் தனியார் சிலர் இணைய தளங்களை தொடங்கி தற்போது  வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர். குறிப்பாக இந்த கோவிலில் நடை பெறக்கூடிய 60 ஆம் கல்யாணங் களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக ரூ.2 ஆயிரம் மட்டுமே வசூல் செய்யப் படுகிறது. இதற்கு உரிய ரசீதும் வழங்கப் படுகிறது.

ஆனால் பல்வேறு இணைய தளங்கள் கோவிலின் பெயரில் போலி யாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த  இணையதளங்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 4 லட்சம் வரையில் 60 ஆம்  கல்யாணம் மற்றும் அபி ஷேகங்களுக்கு வசூலிக்கப்படுகிறது. இதுபோல் பல கோடி ரூபாய்கள் ஏமாற்றப்பட்டு கோவிலின் பெயரால் மோசடி செய்யப்பட்டுவருகிறது. எனவே இந்த இணையதளங்கள் வைத்திருப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதுமட்டுமின்றி இதுபோன்ற போலி யான இணையதளங்களை உடனடி யாக முடக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.  இந்த வழக்கின் விசாரணை நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு செவ்வாயன்று நடைபெற்றது. அப்போது, இதுகுறித்து  நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக  அரசு தரப்பில்   தெரிவிக்கப்பட்டது.  ஆனாலும் இதுபோன்ற நட வடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடி யாது என கூறிய நீதிபதிகள், பல்வேறு வழிகாட்டுதல்களையும், உத்தரவு களையும் பிறப்பித்தனர். கோவிலின் பெயரில் தனியார் இணையதளம் தொடங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடி யாது. அந்த இணையதளத்தை உட னடியாக முடக்க வேண்டும். மேலும்  இந்த சம்பவத்தில் தொடர்புடை யவர்கள் மீது வழக்கு பதிவு செய்து  குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இணைய தளம் முடக்கம் மற்றும் குற்றவியல் நட வடிக்கைகள் குறித்து கோவிலின் இணை ஆணையர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்  என்று  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. மக்களின் மத உணர்வுகளை வியாபாரமாக்க வேண்டாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

;