சென்னை,அக்.11- சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு, தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் போன்ற வைகள் காரணமாக விமான சேவை, சரக்குகள் கையாளுவதில் பெரு மளவு பாதிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து பழைய நிலைக்கு திரும்பி விட்டது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து, பயணிகள் விமான சேவை படிப்படி யாக அதிகரித்து வந்தது. தற்போது அது பெரிய அளவில் அதிகரித்து, உச்சத்தை அடைந்துள்ளது. சென்னை விமான நிலைய சரக்க கத்தில் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 21 ஆயிரத்து 173 டன் சரக்கு கள் கையாளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஆகஸ்டு வரையிலான 5 மாதங்களில் 1,51,579 டன் சரக்குகள் சென்னை விமான நிலைய சரக்ககத்தில் கையாளப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் 1,44,879 டன் சரக்குகள் கையாளப்பட்டி ருந்தது. எனவே கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 6,700 டன் சரக்குகள் அதிகரித்து உள்ளது. இது 4.6 விழுக்காடு அதிகம் ஆகும். சென்னையிலிருந்து வெளிநாடுக ளுக்கு குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஐரோப்பிய நாடு கள், வளைகுடா நாடுகள் போன்றவை களுக்கு பெருமளவு சரக்குகள் ஏற்று மதி செய்யப்படுகின்றன. ஏற்றுமதி பொருட்களில் பதப்படுத்தப்பட்ட தோல், தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், பின்னலாடைகள், வாசனை திரவியங்கள் மற்றும் காய்கறிகள், பழங்கள், பூக்கள், எந்திரங்களின் உதிரி பாகங்கள் போன்றவைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அதேபோல் இறக்குமதி செய்யப் படும் பொருட்களில் கம்ப்யூட்டர்கள், அதன் உதிரி பாகங்கள், அச்சு பணிக்கு பயன்படுத்தும் மைகள், காகிதங்கள், நவீன இயந்திரங்கள், கருவிகள், மருந்து பொருட்கள், மருத்துவ உப கரணங்கள் உள்ளன. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவைகளும் பெரு மளவு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும், சென்னை விமான நிலையத் தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் 10 ஆயிரத்து 876 விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. அந்த விமானங்களில் 14 லட்சத்து 97ஆயிரத்து 483 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம் பர் மாதம் 6,884 விமான சேவைகளில், 7.04 லட்சம் பயணிகள் பயணித்து இருந்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரலில் இருந்து செப்டம்பர் வரை யிலான 6 மாதங்களில் மொத்தம் விமானசேவைகள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 872. அதில் 23.74 லட்சம் பேர் பயணம் செய்து இருந்த னர். ஆனால் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதத்தில் இருந்து, ஆகஸ்டு வரை 65 ஆயிரத்து 653 விமானங்க ளும், அதில் பயணித்த பயணிகள் எண்ணிக்கை 86 லட்சத்து 68 ஆயிரத்து 492 லட்சமாக அதிகரித்து உள்ளது. பயணிகள் போக்குவரத்தில் சிங்கப்பூர், இலங்கை, துபாய் சர்வ தேச விமானங்களும், தில்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், அந்தமான் போன்ற உள்நாட்டு விமான சேவைகளும், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்த னர்.