states

img

தில்லையாடி பட்டாசுத் தொழிற்சாலையில் வெடி விபத்து: 4 பேர் உடல் சிதறி பலி!

மயிலாடுதுறை அக். 4 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள தில்லை யாடி பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் உடல்  சிதறி பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. தில்லையாடியை சேர்ந்தவர் மோகன். இவர் தில்லையாடி தெற்குத் தெரு காத்தாயம்மன் கோவில் அரு கில் ‘மோகன் பயர் ஒர்க்ஸ்’ என்ற பெய ரில் பட்டாசு தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.  இங்கு 10-க்கும் மேற்பட்ட ஆண்கள் - பெண்கள் பட்டாசு தயாரிப்பில் பணி யாற்றி வந்தனர். தற்போது தீபாவளி நெருங்கு வதால், கடந்த ஓரிரு நாட்களாக பட்டாசு தயாரிப்பு தீவிரமாக நடந்துள் ளது. புதனன்று 8 ஆண் தொழி லாளர்கள் மட்டும் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், மூவலூரைச் சேர்ந்த  மதன், நிகேஷ், ராகவன் மற்றும் கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் ஆகி யோர் உடல்கள் சிதறி உயிரிழந்தனர்.  தில்லையாடியை சேர்ந்த மணி வண்ணன், காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த பக்கிரிசாமி, கடலூர் மாவட்டம் முட்லூரை சேர்ந்த மாசிலாமணி, நாகை பொய்கைநல்லூரைச் சேர்ந்த மாரியப்பன் ஆகிய 4 பேர் பலத்த காயங் களுடன் நாகப்பட்டினம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டு உள்ளனர். விபத்தில் பலியானோரின் உடல்கள் அரைக் கிலோ மீட்டர் தூரத்திற்கு 28  இடங்களில் சிதறிக் கிடந்தது, காண்போ ரை கண்கலங்கச் செய்துள்ளது.  பிற்பகல் 3.15 மணிக்கு ஏற்பட்ட விபத்தால் 10 கிலோமீட்டர் தொலை வுக்கு  உள்ள கிராமங்களில் பயங்கர சத்தம் கேட்டு வீடுகள் அதிர்ந்ததால் பொதுமக்கள் பீதிக்குள்ளாகினர்.  விபத்து தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீசார், தொழிற்சாலை யின் உரிமையாளர் மோகன் என்ப வரை கைது செய்துள்ளனர். முன்னதாக விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. சீனி வாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ. ரவிச்சந்திரன், கே.பி.  மார்க்ஸ், பூம்புகார் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா எம்.முரு கன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.  விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி, உரிய பாதுகாப்பு ஏற்பாடு களுடன் பட்டாசு ஆலைகள் இயங்கு வதை உறுதி செய்வதுடன், விபத்தில் பலியான மற்றும் படுகாயம் அடைந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.