காத்மண்டு, மே 23- நேபாளத்தைச் சேர்ந்த மலையேறும் வீரரான காமி ரீடா 28ஆவது முறையாக உலகின் மிக உயரமான சிகரமான எவ ரெஸ்டில் ஏறி சாதனை புரிந்துள்ளார். 29 ஆயிரத்து 32 அடி உயரமுள்ள எவ ரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதை இலக்காகக் கொண்டு உலகம் முழுவதுமுள்ள மலை யேறும் வீரர்கள் இயங்கிக் கொண்டிருக்கி றார்கள். இதுவரையில் 6 ஆயிரத்து 98 பேர் எவரெஸ்டில் ஏறுவதில் வெற்றி பெற்றுள்ள னர். இவர்களில் பலர் ஒன்றிற்கும் மேற் பட்ட முறை அதில் ஏறியிருக்கிறார்கள். 11 ஆயிரத்து 346 முறை எவரெஸ்டை அடைந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வப் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இவ்வாறு பல முறை எவரெஸ்டில் ஏறிய வர்களில் நேபாளத்தைச் சேர்ந்த 53 வயதா கும் காமி ரீடா ஷெர்பா மே 23 ஆம் தேதி யன்று 28ஆவது முறையாக ஏறி சாதனை புரிந்துள்ளார். கடந்த வாரத்தில்தான் அவர் 27ஆவது முறையாக ஏறியிருந்தார். எவரெஸ் டில் ஏறிச் சாதனை புரிந்த காமி ரீடா, அங்கி ருந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறார் என்று நேபாள சுற்றுலாத்துறை அலுவலர் பிக்யான் கொய்ராலா தெரிவித்திக் க்கிறார். உலகின் உயரமான இந்த சிகரத்தில் 1953 ஆம் ஆண்டில் முதன்முறையாக நியூ சிலாந்தின் எட்மண்டு ஹில்லாரி மற்றும் அவருக்குத் துணையாகச் சென்ற நேபா ளத்தின் டென்சிங் ஆகிய இருவரும்தான் ஏறி சாதனை படைத்தார்கள். இந்த சாதனை கள் ஒருபுறமிருக்க, எவரெஸ்ட் ஏறும் முயற்சியில் ஏராளமான உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. நடப்பாண்டில் மலையே றும் பருவம் தொடங்கியதில் இருந்து இது வரையில் 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சிலர் காணாமல் போயிருக்கின்றனர். அவர்கள் பற்றிய விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.