states

ஈசிஆர் சாலை விரிவாக்கம் கைவிடப்படவில்லை: அமைச்சர் விளக்கம்

சென்னை, ஏப்.19 - தமிழ்நாடு சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின் போது கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணியை தமிழ்நாடு அரசு கைவிட்டதால் ரூ.3000 கோடி ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பியதாக வந்த செய்திகள் குறித்து கொங்கு ஈஸ்வரன்  எழுப்பிய கேள்விகளுக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.  சென்னை முதல் புதுச்சேரி வரை யிலான கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அமைக்கும் பணி கைவிடப்பட்டதாக வெளியான செய்தி தவறானது. அதற்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டு ஒன்றிய அரசின் பங்களிப்புடன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார். கிழக்கு கடற்கரை சாலை சென்னை  முதல் புதுச்சேரி வரைக்கும் 135 கி.மீ  தூரத்திற்கு கடந்த 2002 ஆம் ஆண்டில்  அமைக்கப்பட்டது. சுமார் 13 இடங்களில் அபாயகரமான வளைவுகள் இருப்ப தால் சரிசெய்வதற்காக ரூ. 330 கோடி  தேவைப்பட்டது. இதற்காக வங்கியில்  ரூ.265 கோடி கடன் பெறப்பட்டது.

இந்த கடனை திருப்பி செலுத்துவதற்காக இரண்டு இடங்களில் சோதனை சாவடி  அமைத்து வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த சாலை ஒன்றிய அரசின்  தேசிய நெடுஞ்சாலைதுறையின் முழுகட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டது. சுங்க கட்டணத்தை வசூ லிப்பது யார் என்ற பிரச்சனை ஏற்பட்டது.  இதற்கு மாநில அரசு தடையில்லா சான்று  வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கேட்டது. அதையும் கொடுத்து விட்டோம் என்றும் அமைச்சர் தெரி வித்தார். கிழக்கு கடற்கரை சாலை மாமல்ல புரம் - முகையூர், மரக்காணம்-புதுச்சேரி, புதுச்சேரி-கன்னியாகுமரி வரைக்கும் 6 வழிச்சாலையாக விரி வாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டு நில எடுப்பு பணி கள் நடந்து வருகிறது. நாளேடுகளில் வந்த அந்த செய்தி முழுக்க முழுக்க தவ றானது என்றும் அமைச்சர் கூறினார். அதிமுக உறுப்பினர் சு. ரவி,  திமுக உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா  ஆகியோர் எழுப்பிய துணைக் கேள்விக ளுக்கு பதில் அளித்த அமைச்சர்,  மாநிலத்தில் உள்ள ஒருவழிச்சாலை களை இருவழிச்சாலைகளாகவும், இருவழிச்சாலைகளை 4 வழிச்சாலை களாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.