மதுரை, ஜூலை 12- பீகார் தொழிலாளிகள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ வெளியிட்ட பீகாரை சேர்ந்த யூ டியூபருக்கு மதுரை மத்திய சிறையில் “ஏ” வகுப்பு வழங்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திரிபுராரி குமார் திவாரி (எ) மணிஷ் காஷ்யப் பீகாரைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஆவார். இவரை, பீகார் தொழிலாளிகள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோ வெளியிட்ட வழக்கில் பீகார் காவல்துறையினர் கைது செய்தனர். பின் னர் அவரை மதுரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மதுரை காவல்துறையினர் தேசிய பாது காப்புச் சட்டத்தின் கீழ் மணிஷ் காஷ்யப்பை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மணிஷ் காஷ்யப்புக்கு மதுரை மத்திய சிறையில் “ஏ” வகுப்பு வழங்க உத்தரவிடக் கோரி இவரது சகோதரர் தில்லியைச் சேர்ந்த திரிபுவன் குமார் திவாரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வு முன்பு புதனன்று நடைபெற்றது. அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிகுமார் வாதிடுகை யில், முதல் வகுப்பு வழங்க சட்டத்தில் இடமில்லை. தேசிய பாதுகாப்புச் சட்டம் தடுப்பு காவல் கைதியாக அடைக்கப்பட் டுள்ளதால் இவருக்கு முதல் வகுப்பு முடி யாது. மனுதாரரின் சிறையில் “ஏ” வகுப்பு வேண்டிய மனு பரிசீலனை செய்து நிராக ரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள்,மணிஷ் காஷ்யப் மீது கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. மேலும் அரசு தரப்பில் மனு பரி சீலனை செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி னர். இதனைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில், மனுவை திரும்பப்பெறுவதாக தெரிவித்தனர். பின்னர் வழக்கை தள்ளு படி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.