சென்னை, செப். 27 - கர்நாடகத்தில் தமிழர் கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல் துறை தலைவர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள் ளார். இதுதொடர்பாக சங்கர் ஜிவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காவிரி நதி நீர் பிரச்சனை சம்மந்தமாக பல்வேறு சமூக ஊடகங் களில் சிலர் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடி யோக்கள் மற்றும் போஸ்டர் களை தற்போது நடந்தவை போல சித்தரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள். இத்த கைய வதந்திகள் மக்கள் மத்தியில் தவறான புரித லை உண்டாக்கி அதன் விளைவாக சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். இவ்வாறான வதந்தி களைப் பரப்புவோர் மீது, சட்டப்படி கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும் பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தவறான தகவல்களை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படு கின்றனர்” என குறிப்பிட ப்பட்டுள்ளது.