திண்டுக்கல், நவ.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான தினமான அக்டோபர் 31 அன்று பழனி அருகே பொந்துப்புளியில் பளியர் இன மக்களோடு கட்சியின் தலைவர்களும் பங்கேற்ற விருந்தோம்பல் விழா நடைபெற்றது.
மருத்துவ முகாம்
பழனி ஒன்றியம் காவலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொந்துப்புளி பளியர் இன மக்களின் குறைகளை கேட்டு, அவர்களது பிரச்சனைகளை அதிகாரிகளிடம் எடுத்துச்சென்று தீர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் செவ்வாயன்று பொந்துப்புளி பழங்குடி மக்கள் குடியிருப்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. பளியர் இன மக்களுக்கு வேட்டி சேலை, சிறுவர்களுக்கான உடைகள் என புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சின்னதுரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர். சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.அருள்செல்வன், எஸ். கமலக்கண்ணன், ஒன்றியச் செயலாளர் பி.செல்வராஜ், தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர் என்.கனகு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் தா.அஜய் கோஸ், தமிழ்நாடு மருந்து-விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பாக ராம்குமார், பாலமுருகன், ராஜசேகரன் மற்றும் பழனி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வர்க்க வெகுஜன அமைப்பின் நிர்வாகிகள் பங்கெடுத்தனர். இந்நிகழ்வில் பளியர் பழங்குடி குடும்பங்களைச் சார்ந்த மக்கள், தங்கள் குழந்தை மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பளியர் மக்களிடம் பேசிய மாவட்டச்செயலாளர் சச்சிதானந்தம், பழங்குடி மக்களின் சாதிச்சான்றிதழ், கல்வி, மருத்துவம், வீடு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச்சொல்லி அதனை நிறைவேற்றித்தர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உங்களது குடும்பத்தில் ஒருவராக இருந்து போராடி பெற்றுத்தரும் என்று தெரிவித்தார். இதனை அம்மக்கள் பெரிதும் வரவேற்றனர். (நநி)