states

அரிசி விலை 10 ஆண்டுகளில் இல்லாத கடும் உயர்வு ஏற்றுமதிக்கு 20 சதவிகித வரி விதித்த ஒன்றிய அரசு!

புதுதில்லி, செப்.9- இந்தியாவிலிருந்து அரிசி ஏற்று மதிக்கு 20 சதவிகித வரி விதித்து ஒன்  றிய அரசு நடவடிக்கை எடுத்துத்துள் ளது. அத்துடன், உடைந்த அரிசி (குருணை) ஏற்றுமதிக்கும் தடை விதித்துள்ளது. இந்தியர்களின் முக்கிய உணவு தானியமான அரிசிக்கு அண்மையில் ஒன்றிய பாஜக அரசு 5 சதவிகித ஜிஎஸ்டி விதித்தது. இதனால், நாடு முழுவதும் அரிசி விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்ந்தது. தமிழ்நாட்டில் சென்னையில் 26 கிலோ எடையுள்ள 1 மூட்டை பொன்னி அரிசி முன்பு 900 ரூபாய்க்கு விற்கப் பட்டது, தற்போது 1200 ரூபாயாக உயர்ந்துள்ளது. 1 மூட்டைக்கு ரூ. 300 உயர்ந்துள்ளது. பொன்னி பச்சை அரிசி விலை முன்பு 1050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, தற்போது  1250 ரூபாயாக உயர்ந்துள்ளது.  பாசு மதி அரிசியின் விலையும் 2200 ரூபாயி லிருந்து 2500 ரூபாயாக உயர்ந்தது. இது ஒருபுறமிக்க, ஒன்றிய அரசின் வேளாண்துறை வெளியிட்ட புள்ளி விவரம், நடப்பாண்டில் இந்தியாவில் நெல் சாகுபடி பரப்பளவு 6 சதவிகிதம்  குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தக வலை வெளியிட்டது. உத்தரப் பிரதேஷ், பீகார், மேற்கு  வங்கம் உள்ளிட்ட அரிசி அதிகம் விளை யும் மாநிலங்களில் மழை குறைந்தத தால் அரிசி விளைச்சல் குறைந்துள்ள தாக தெரிவித்தது. நாடு முழுவதும் தற்போது 367.55 லட்சம் ஹெக்டேர் மட்டுமே நெல் சாகு படி செய்யப்பட்டுள்ளதாக கூறியது. இதனால் 2022-23- ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி கணிசமான பாதிப்பைச்  சந்திக்கும் என்பதுடன், பற்றாக்குறை அபாயத்திற்கு நாட்டை இட்டுச் செல்  லும், ஏற்கெனவே அரிசி விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த பற்றாக்குறை விலைவாசியை மேலும்  கடுமையாக அதிகரிக்கும் என்ற எச்ச ரிக்கைகள் எழுந்தன.

இந்தப் பின்னணியிலேயே  நெல் மற்றும் அரிசி ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு திடீரென 20 சதவிகித  வரி விதித்துள்ளது. எனினும், செப். 9 முதல் 15 வரை வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்ய சுங்கத்துறை அனு மதியுடன் துறைமுகத்தில் தயாராக இருக்கும் சரக்குகளுக்கு தகுந்த ஆவ ணங்களின் அடிப்படையில் விலக்கு அளிக்க முன்வந்துள்ளது. புழுங்கல் அரிசி மற்றும் பாசுமதி அரிசிக்கு ஏற்றுமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் அரிசி ஏற்றுமதியில்  சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா  உள்ளது. உலக ஏற்றுமதியில் இந்தி யாவின் பங்கு 40 சதவிகிதமாக உள் ளது. 2021-இல் 150 நாடுகளுக்கு 2.15 கோடி டன் அரிசியை இந்தியா அரிசி யை ஏற்றுமதி செய்தது. தற்போது 20 சதவிகித வரி விதிப்  பால், வரும் மாதங்களில் இந்தியாவின்  அரிசி ஏற்றுமதி 25 சதவிகிதம் அளவில் குறையும் என்று அரிசி ஏற்றுமதியா ளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய வரி விதிப்பால்  இறக்குமதியாளர்கள் இந்தியா வுக்குப் பதிலாக தாய்லாந்து, வியட் நாம், பாகிஸ்தான் , மியான்மர் ஆகிய  நாடுகளிலிருந்து அதிக அளவில் அரிசியை இறக்குமதி செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவிகித வரியுடன், உடைந்த அரிசி (குருணை) ஏற்றுமதிக்கு முழுமையாகவே தடை விதித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு வெள்ளிக் கிழமை முதல் நடைமுறைக்கு வந் துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு,  கோதுமை தானியம், கோதுமை மாவு  (ஆட்டா) ஏற்றுமதி மற்றும் மைதா,  ரவை (ரவா/சிர்கி), முழுக்கால் ஆட்டா  மற்றும் அதன் விளைவாக வரும் ஆட்டா போன்ற பிற பொருட்கள் ஏற்று மதிக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடுகளை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.