states

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிரான வழக்குகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு

சென்னை, ஜூலை 7 - அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக ஜூன் 29 அன்று இரவு, உத்தரவு பிறப்பித்த ஆளுநர் ஆர்.என். ரவி, அடுத்த சில மணி நேரங்களில், அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைத்த ஆளுநர் ரவியின் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவர் என அறியப்படுபவருமான எம்.எல். ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  அந்த மனுவில், “அரசியல் சாசனத்தின்படி ஆளுநர் எடுத்த முடிவை, மறுபரிசீலனை செய்ய முடியாது. நீதிமன்றம்தான் அதை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும். ஆளுநர் முடிவு  எடுத்த பிறகு, வேறு யாருடனும் கலந்தாலோ சிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகி யோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை யன்று விசாரணைக்கு வந்தது.  

அப்போது மனுதாரர் தரப்பில், “அமைச்ச ரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ள போதும், அந்த உத்தரவை நிறுத்திவைக்க அதி காரமில்லை. ஒன்றிய உள்துறை அமைச்சர், அட்டர்னி ஜெனரல் ஆலோசனை பெற்றே நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டது. அதனைக் கேட்ட நீதிபதிகள், “ஆளுந ருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? அப்படியான தீர்ப்பு ஏதேனும் உள்ளதா?” என கேள்வி எழுப்பி, அவ்வாறான உத்தரவுகள் இருப்பின் அவற்றை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசா ரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்த னர். செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்ச ராக நீடிக்கிறார் என மனுதாரர் கூறியதற்கு, “இதனால், மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்” என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். “மக்கள் வரிப்பணத்தில் அவருக்கு ஊதியம் வழங்கப்படுகிறது” என்று மனுதாரர் கூற, “அவர் (செந்தில் பாலாஜி) எம்எல்ஏ-வாகவும் இருக்கிறாரே” என்று தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். இதேபோல, செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கோரிய ஜெ. ஜெய வர்த்தன், ராமச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையையும் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

;