states

img

வேல்முருகன் உடலை வாங்க மறுத்து போராட்டம்

சென்னை, அக்.13- காஞ்சிபுரம் மாவட்டம் திரு பெரும்புதூர் வட்டம் படப்பை பகுதி யைச் சேர்ந்தவர் வேல்முருகன் . இவர் தனது குழந்தைகளின் படிப்பிற்காக சாதிச் சான்றிதழ் கேட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசினுடைய அனைத்து அலுவலகங்களுக்கும் அலைந்தார். ஆனால் அரசு நிர்வா கம் வழக்கம்போல் வழங்க மறுத்த  காரணத்தால் தீக்குளித்து தற்கொலை  செய்து கொண்டார்.    அவர் மலைக்குறவன் இனத்தைச்  சார்ந்தவர். அதாவது எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்.  ஐந்து ஆண்டு களாக அலைந்தும்  பிள்ளைகள் படிப்பிற்காக சாதிச் சான்று கிடைக்க வில்லையே என்ற ஏக்கத்தில் அவர் இறுதியாக ஒரு முறை அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் கோட்டாட்சியர் அலுவலகம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் அனைத்து அலுவலகங்களும் சென்று முயற்சி  செய்த பிறகும் தீர்வு கிடைக்காத காரணத்தால் இரண்டு நாட்களுக்கு  முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வளாகத்தில்  தீக்குளித்து தற்கொலை  செய்து கொண்டார். தமிழகத்தில் உரிய சாதிச்சான்றி தழ் கோரி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பல பிரிவினர் பல ஆண்டுக ளாகப் போராடி வருகிறார்கள். ஆனால் அரசு நிர்வாகம் அசைய மறுப்பதால் பலர் விபரீத முடிவை நாடவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். இப்படித்தான் வேல் முருகனும் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கில்  அவரது உடல் உள்ளது. அவரது மரணத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம், குறவன் பழங்குடி மக்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். வேல் முருகன் மனைவி சித்ரா. இவர்களுக்கு பிரதீபா, பிரியங்கா  என்ற இரு மகள்களும் பிரதிவ ரூபன்  என்ற மகனும் உள்ளனர். உயிரிழந்த வேல்முருகன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், வேல்   முருகன் குழந்தைகளுக்கு உடனடி யாக எஸ்டி சாதி சான்றிதழ் வழங்க  வேண்டும், சாதிச் சான்று கொடுப் பதில் சுணக்கம் செய்த அதிகாரிகள் மீது வன்கொடுமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய  வேண்டும், வேல்முருகன் குடும்பத் திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்,  தமிழகத்தில் உள்ள அனைத்து குறவன் இனை மக்களுக்கும் சாதிச்  சான்றிதழ் எஸ்டி சாதி சார்ந்த  எஸ் டி வழங்கிட வேண்டும் வேல்முரு கன் பிள்ளைகளுடைய கல்வி செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உள்ளிருப்பு போராட்டம்  நடைபெற்ற வருகிறது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மத்திய சென்னை  மாவட்டச் செயலாளர் தோழர் எம்.ஆர்.  மதியழகன், துணைத் தலைவர் பா.  சுந்தரம், மாநிலக் குழு உறுப்பினர் கள் பீமன், முரளி உள்ளிட்ட உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றுள்ளனர். சாதி சான்றிதழ் கொடுக்க மறுத்து வேல்முருகனை அலைக் கழித்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீது  வன்கொடுமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு  செய்யவேண்டும் என்றும் இந்த போராட்டத்தில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர்.

உயர்நீதி மன்றம் வழக்கு

இந்த நிலையில் உயர்நீதிமன்றம் சாதி சான்றிதழ் கிடைக்காத காரணத் தால் வேல்முருகன் தீக்குளித்து இறந்த  சம்பவத்தைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்று விளக்கம் அளிக்கக்கோரி மாநில அரசுக்கு  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள் ளது.
 

;