states

போக்குவரத்து ஊழியர்கள் பேரணி

சென்னை, ஜூலை 27- 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்கக் கோரி  வியாழனன்று (ஜூலை 27) சென்னையில் பேரணியாக வந்து  பல்லவன் இல்லம் முன்பு போக்கு வரத்து தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து தொழிலா ளர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 15வது ஊதிய ஒப் பந்தத்தை உருவாக்கி செயல்  படுத்த வேண்டும். எனவே,  ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை யை தொடங்க வேண்டும், போக்குவரத்துக் கழகங்களின் வர வுக்கும் செலவுக்குமான வித்தி யாசத் தொகையை அரசு வழங்க  வேண்டும், அரசுத்துறை ஊழி யர்களுக்கு இணையான ஊதி யத்தை வழங்க வேண்டும், ஓய்வூ தியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை  வழங்கி, ஓய்வூதியத்தை முறைப் படுத்த வேண்டும். 1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூ திய திட்டத்தை செயல்படுத்த  வேண்டும், காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறை நியமனங்களை கைவிட வேண்டும், 15வது ஊதிய ஒப்  பந்த பேச்சுவார்த்தையை தொடங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 8 போக்குவரத்துக் கழக அலுவல கங்கள் முன்பு தமிழ்நாடு அரசு  போக்குவரத்து ஊழியர் சம்மேள னம் சார்பில் போராட்டம் நடை பெற்றது. அதனை தொடர்ந்து மேலாண்மை இயக்குநர்களிடம் மனு அளித்தனர். இதன் ஒருபகுதியாக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் மத்திய பணிமனை வாயிலில் இருந்து கோரிக்கைகளை முழங்கியபடி, பல்லவன் இல்லத்  திற்கு ஊர்வலமாக வந்து தொழி லாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது செய்தியாளர்களி டம் சம்மேளனத்தின் பொதுச்  செயலாளர் கே.ஆறுமுகநயி னார் கூறுகையில், அதிமுக ஆட்சி யில் போக்குவரத்துக் கழகங்க ளில் இருந்த 22 ஆயிரம் பேருந்து களை 20 ஆயிரம் பேருந்துகளாக குறைத்தனர். 15ஆயிரம் பணி யிடங்கள் காலியாக உள்ளதால் தற்போது 18ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. 1500 பேரை எடுக்க புதிதாக போடப்பட்ட அரசாணை குழப் பம் நிறைந்ததாக உள்ளது. பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதோடு போக்கு வரத்து தொழிலாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும், காலி பணியிடங் களை நிரப்ப வேண்டும் என் றார். இந்தப் போராட்டத்திற்கு அர சாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் துணைப்பொதுச் செயலாளர் சிவா தலைமை தாங்கினார். தலைவர் ஆர்.துரை, பொதுச்செயலாளர் வி.தயா னந்தம், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, துணைபொதுச் செய லாளர்கள் ரவிசங்கர் மற்றும் சம்மேளன துணைத் தலைவர் எம்.சந்திரன் உள்ளிட்டோர் பேசி னர். முன்னதாக மேதின பூங்கா வில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.