states

ம.பி. மாநில பாஜக இளைஞரணி நிர்வாகி கைது!

போபால், ஜூலை 5 - பாஜக ஆளும் மத்தியப் பிரதே சத்தில், பாஜக இளைஞர் அணி நிர்வாகியான பிரவேஷ் சுக்லா, பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர்  கழித்த அராஜகம்  பெரும் அதிர்ச்சி யையும், கொந்தளிப்பையும் ஏற் படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நாடு முழுவதும் கண்டனங்களும், கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற முழக்கங் களும் எழுந்த பின்னணியில், சம்பந் தப்பட்ட பாஜக இளைஞர் அணி நிர்வாகி பிரவேஷ் சுக்லா தற்போது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரவேஷ் சுக்லா, ஆதிக்க சமூ கத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, பாஜக எம்எல்ஏ கேதர்நாத் சுக்லா வின் நேரடி பிரதிநிதி என்பதும் குறிப்பி டத்தக்கது. மத்தியப் பிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்திற்கு உட்பட்ட குப்ரி என்ற கிராமத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் 36 வயது இளைஞர் ஆவார். இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவர் தரை யில் உட்கார்ந்திருக்கும் போது, அவ ரது முகத்திற்கு நேராக நின்று கொண்டு, பாஜக இளைஞரணி நிர்வாகி பிரவேஷ் சுக்லா சிகரெட் பிடித்தபடியே சிறுநீர் கழித்து, கொஞ்சமும் மனிதத் தன்மையற்ற வகையில், சாதிய வன்கொடுமையை அரங்கேற்றியுள்ளார்.  இந்த கொடூரமான தீண்டாமை வன்கொடுமைச் சம்பவம் நடந்து 6 நாட்கள் ஆவதாக கூறப்படுகிறது. எனினும், குற்றத்தை நிகழ்த்திய பிர வேஷ் சுக்லா, ஆதிக்க சாதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகி என்பதுடன், அவர் சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதர்நாத் சுக்லா வின் பிரதிநிதி என்பதால், பாதிக் கப்பட்ட பழங்குடி தொழிலாளியின் குடும்பம் காவல்துறையை அணுகி புகார் கொடுப்பதற்கு அஞ்சி, நடந்த கொடுமையை சகித்துக் கொண்டு அமைதியாக இருந்து விட்டனர். எனினும், பிரவேஷ் சுக்லா நிகழ்த்திய சாதிய வன்கொடுமை தொடர்பான வீடியோவை சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். 

குறிப்பாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ், இதுதொடர்பான வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு,  “பழங்குடியின மக்களின் நலன் குறித்து பொய்யாக பேசும் பாஜக தலைவர்கள், உண்மையில் ஏழைப் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழிக்கின்றனர்; இது கண் டிக்கத்தக்கது” என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்த வீடியோவை மத்தியப் பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் டேக் செய்த அவர், “இதுதான் பழங்குடி யின மக்கள் மீது நீங்கள் கொண்டி ருக்கும் அக்கறையா? ஏன் அந்த பாஜக தலைவர் இன்னும் கைது செய்யப்படவில்லை?” என்று கேள்வி களை எழுப்பினார். பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் பிர்வேஷ் சுக்லா என்பதையும், பாஜக எம்எல்ஏ-வான கேதர்நாத் சுக்லாவின் பிரதிநிதி என்பதையும் அவர் பதிவிட்டார்.  இந்த குற்றச்சாட்டிற்கு பாஜக எம்எல்ஏ கேதார்நாத் மறுப்பு தெரி வித்தார். “பிரவேஷ் சுக்லா என் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் எனக்கு அவரைத் தெரியுமே தவிர அவர் பாஜக தொண்டரோ அல்லது எனது பிரதிநிதியோ கிடையாது” என்று கூறினார்.

ஆனால், குற்றவாளி பிரவேஷ் சுக்லாவின் தந்தையான ராமகாந்த் சுக்லாவோ, தனது மகன் பாஜக நிர்வாகிதான் என்றும், அவர் எம்எல்ஏ கேதர்நாத்தின் பிரதிநிதிதான் என்றும் பகிரங்கமாக பொதுவெளியில் உண்மையை போட்டு உடைத்தார். அத்துடன், சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா மற்றும் ரேவா தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜேந்திர சுக்லா ஆகியோருடன், குற்றவாளி பிரவேஷ் சுக்லா ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப் படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. ‘அரெஸ்ட் பிரவேஷ் சுக்லா’ என்ற ஹேஷ்டேக்கும் (முழக் கம்) டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. பிரவேஷ் சுக்லா பாஜக நிர்வாகி யா? என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் கேட்டதற்கு, அவர் “கிரிமினல்களுக்கு சாதி, மதம், கட்சி என எதுவும் இல்லை. ஒரு கிரி மினல் எல்லா வகையிலும் கிரிமினல் மட்டுமே. இந்த நபர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது” என்று சமாளித்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.  இவ்வாறு பல்வேறு மட்டங்க ளிலும் கண்டனங்கள் வலுத்த பின்னணியில், பாஜக இளைஞரணி நிர்வாகி பிரவேஷ் சுக்லா மீது, பட்டி யல் வகுப்பினர்- பழங்குடியினர் வன் கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் ஐபிசி சட்டப் பிரிவுகள் 294 (பிறருக்கு தொல்லை தரும் வகையில், பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல்), 504 (அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு அவமானப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேசிய  பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பிர வேஷ் சுக்லா கைது செய்யப் பட்டுள்ளார்.

;