சென்னை,ஜூலை 16 - விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றிபெற்ற அன்னியூர் சிவா செவ்வாயன்று (ஜூலை 16) சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சபாநா யகர் மு. அப்பாவு அறையில் எம்எல்ஏ வாக பதவியேற்றுக் கொண்டார். அவ ருக்கு மு. அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் க. துரைமுரு கன், க. பொன்முடி, தொல். திருமாவள வன் எம்.பி. உள்ளிட்டோர்பங்கேற்றனர்.