states

இடுபுடி ஆவார் எடப்பாடி - நவகவி

அமித்ஷா அமுக்குஷா - மோடிக்கு
எடப்பாடி இனிப்பு பாதுஷா!
எலக்சன் முடிஞ்சதும் -அவரை
முழுங்கு வாங்க ரொம்ப சல்லீசா!
மோடிக்கு எதிரா அப்போ
ஜெயலலிதா லேடி - இப்போ
பிஜேபி சட்டிக்கு  எடப்
பாடி ஒரு மூடி.
        (அமித்ஷா)

மசூதியை இடிக்கும் மோடி 
கோயபல்சு-அவரை
மயிலிறகால் அடிக்கிறாரு 
இபிஎஸ்சு
ஊடல் முடிஞ்சு கூடல் நடக்கும்
சீக்கிரமே - இவங்க
தேர்தல் சண்டை தில்லாலங்கடி

நாடகமே
அதிமுக - இனி
காலி டப்பா - அதை
அமுக்குமப்பா மோடி 
கோட்டுப் பாக்கெட் ஜிப்பா
        (அமித்ஷா)

பத்து வருஷம் பிஜேபிக்கு
தோப்புக்கரணம் - இப்போ
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து
வீரவசனம்

உழவன் போல இபிஎஸ் தலைப்
பாகை கட்டியே -வாரார்
உழவர்களின் காதுகளில் 
பூவைச் சுத்தவே
அதிமுக - அமித்
ஷாதிமுக - அதை
அண்ணா திமுக ன்னு இனி
சொல்லாதக்கா
         (அமித்ஷா)