states

img

கத்தார் உலகக்கோப்பையை விளம்பர பொருளாக பயன்படுத்திக்கொண்ட அம்பானியின் ஜியோ

இந்தியாவில் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவிகளுக்கென பல் வேறு ஓடிடி தளங்கள் உள்ளன. அனைத்து ஓடிடி தளங்களும் சந்தா கட்டண கொள்கை வைத்துள்ளது. மூன்று மாதம் ரூ.149 என 6 மாதம், ஒரு வருடம் என்ற அடிப்படையில் சந்தா கட்டணங்கள் உள்ளது. இதுபோக பிரி மீயம் எனவும் தனியாக கட்டணம் உள் ளது. கட்டணம் வசூலித்தாலும் இந்தி யாவில் ஹாட் ஸ்டார், அமேசான், நெட்பிளிக்ஸ், சோனி லைவ், ஜீ 5 என  5 ஓடிடி தளங்கள் மட்டுமே பிரபலமாக உள்ளது. இதில் ஹாட் ஸ்டார், அமே சான் ஆகிய தளங்கள் புதிய திரைப் படங்களை போட்டி போட்டு வெளியிடு வதால் முன்னணி இடத்தில் உள்ளது. ஹாட் ஸ்டார் இந்திய அணியின் ஆட்ட ங்கள், புரோ கபடிகள், ஐபிஎல், புதிய வெப் சீரியஸ், மேஹா ஹிட் படங்கள் என நட்சத்திர அந்தஸ்தில் உள்ளது.  ஜியோ டிவி, ஜியோ சினிமா, வூட்  போன்ற தளங்கள் இரண்டாம் நிலை யில் உள்ளது.

சில கட்டண கொள்கை இருந்தாலும் மாறுபட்ட செயல்பாடு களால் வூட் (VOOT) வேறு நிலைக்கு சென்ற நிலையில், இலவச பிரிவான ஜியோ சினிமா மட்டும் இன்று வரை கடைசி மட்டத்தில் உள்ளது. ஜியோ  சினிமாவிற்கு  கட்டணம் எதுவும்  தனியாக கிடையாது. இலவச பதிவு மூலம், இலவசமாகவே திரைப்படங் களை கண்டுகளிக்கலாம்.  எல்லாமே இலவசம் என்றாலும் ஜியோ வகைகளுக்கு இந்திய ஓடிடி துறையில் எவ்வித செல்வாக்கும் கிடையாது. காரணம் புதிய ஒப்பந்த படங்கள், வெப் சீரியஸ் எதுவும் அந்த  தளத்தில் இருக்காது. பழைய தமிழ் படங்கள், டப்பிங் படங்கள்தான் இருக்கும். இதனால் ஜியோ சினிமா இந்திய ஓடிடி துறையில் கானல் நீரைப் போன்று உள்ள நிலையில், தனது நிறுவனத்தின் பெயர் பிரபல மாக மாற அம்பானியின் ஜியோ நிறு வனம் 22-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் பிரம்மாண்ட செலவு மூலம்  இலவச ஒளிபரப்பை வெளியிட்டு விளம்பர ஆதாயம் தேடியுள்ளது. இந்த இலவச ஆதாயம் எந்தள வுக்கு ஜியோ சினிமாவின் பெயரை  மாற்றப் போகிறது என பொறுத்திரு ந்து பார்க்கலாம்.