புதுதில்லி, மார்ச் 18- - ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதே சத்தில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ராஜீவ் குமாரிடம் ஜம்மு - காஷ்மீர் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட் டுக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா தலைமையில், காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கையெழுத்திட்ட இரண்டு பக்க மனுவும் தேர்தல் ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், திமுக, டோக்ரா சபா, பாந்தர்ஸ் கட்சி, அவாமி தேசிய மாநாடு உள்ளிட்ட கட்சிகளின் தலை வர்களும் மனுவில் கையெழுத்திட்டுள் ளனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது: “காஷ்மீர் மற்றும் ஜம்முவைச் சேர்ந்தவர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் நாங்கள் (அரசியல் கட்சி கள்) அனைவரும், ஜம்மு - காஷ்மீரில் ஜனநாயக செயல்முறையை விரை வாக மீட்டெடுப்பதை விரும்புகிறோம். சட்டசபைத் தேர்தலை மேலும் தாமதப்படுத்துவதும் மறுப்பதும் ஜம்மு- காஷ்மீர் மக்களின் அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளை மறுப்பது மற்றும் அரசியலமைப்பு கடமைகளை மீறுவதாகும். இந்திய அரசியலமைப்பின் உணர்வைப் புறக்கணித்து, பிரதி நிதித்துவமற்ற மற்றும் பொறுப்பற்ற அதிகாரத்துவத்தை நீடிக்கச் செய்வதன் மூலம், மக்களை அசௌக ரியம் மற்றும் சிரமத்திற்குள் தள்ள அர சாங்கத்திற்கு அனுமதி அளிப்பதாகி விடும். பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் (பிஆர்ஐ) நடைமுறையில் இருப்ப தால், சட்டமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறப்படுமானால், மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களையே நடத்த வேண்டிய அவசியமில்லை என்றாகி விடும்.
பஞ்சாயத்துத் தேர்தல்கள் மற்றும் பிற மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்க ளுக்கான தேர்தல்களே, சட்டப் பேர வைத் தேர்தல்கள் மற்றும் அரசாங் கத்திற்கு மாற்றாக இருக்க முடி யாது. அப்படியே இருந்தாலும் அதற்காக தேர்தல் ஆணையம், சட்ட மன்றத் தேர்தலைத் தவிர்க்கவும் தாம தப்படுத்தவும் முடியாது. ஒன்றிய உள்துறை அமைச்சரும், இந்திய அரசாங்கத்தின் பிற அதிகாரி களும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், இறுதி முடிவை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்றும் கூறி யுள்ளனர். அந்த வகையில், ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கான ஜனநாயக உரிமைகள் மற்றும் ஜனநாயக அமைப்புக ளுக்கான அணுகல் ஆகியவற்றை மீட்டெடுக்கும் வகையில், ஜம்மு - காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை இனியும் தாமதமின்றி அறிவிக்கவும், தேர்தல் அட்டவணையை அறி விக்கவும் தேர்தல் ஆணையம் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவது, தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்புச் சட்ட கடமையாகும். அரசியலமைப் பால் ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அனைத்து அரசியலமைப்பு உரிமை களை மீட்டெடுப்பதற்கும், ஜம்மு - காஷ் மீர் மக்களின் அரசியல் அபிலாஷை களை நிறைவேற்றுவதற்கும் சட்டப் பேரவைத் தேர்தல் முதல் மற்றும் முக்கியமான துவக்கமாக இருக்கும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப் பட்டு உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை சந்தித்த பின்னர் பரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் இயல்புநிலையை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வரு வதாக அரசாங்கம் கூறி வருவதாக ராஜீவ் குமார் தெரிவித்ததாகவும், அப்படியானால், ஜம்மு- காஷ்மீர் மக்களின் அவலநிலையை ஆணை யம் ஏன் கவனிக்கவில்லை?; ஜம்மு - காஷ்மீரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சட்டமன்றம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல் இருப்பது பற்றி ஏன் கேள்வி எழுப்ப வில்லை என்றும் கேட்டதாக தெரி வித்துள்ளார்.
மேலும், ஜம்மு - காஷ்மீர் தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணை யர் உறுதியான பதில் எதையும் தெரி விக்காவிட்டாலும், இந்த விஷ யத்தைப் பற்றி விவாதிக்க தேர்தல் ஆணையம் விரைவில் ஒரு கூட்டத்தை நடத்தும் என தங்களுக்கு உத்தரவாதம் அளித்ததாகவும் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்மு - காஷ்மீரில் கடைசியாக 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது- அதன்பின்னர், 2019 ஆம் ஆண்டில், ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது பிரிவை ரத்து செய்த நரேந்திர மோடி அரசு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. அதன் பிறகு இப்போது வரை அங்கு தேர்தல் நடத்தாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லா மல் மறைமுகமாக ஜம்மு - காஷ்மீரை தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பி டத்தக்கது.