states

தீக்கதிர் விரைவு செய்திகள்

24 பேர் உள்ளே, 29 பேர் வெளியே: அச்சத்தில் அஜித்பவார்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் நீக்கப் பட்டு, புதிய தலைவராக சுனில் தாட்கரே நியமிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ள அஜித் பவார் அணியினர், மும்பையில் மந்த்ராலயா-வுக்கு எதிரே கட்சிக்கு புதிய அலுவலகத்தையும் திறந்துள்ளனர். இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் 24 பேர் அஜித் பவாருக்கு ஆதரவாக இருப்பதாகவும், 14 பேர் சரத் பவாருக்கு ஆதரவாக இருப்ப தாகவும், 15 பேர் இன்னும் முடிவெடுக்காமல் இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை அஜித் பவார், புதனன்று கூட்டியுள்ளார்.

‘எனது போராட்டம் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரானது’

“மகாராஷ்டிராவிலும் நாட்டிலும் வகுப்புவாத பிளவை உருவாக்க முயற்சிகள் மேற்கொள் ளப்படுகின்றன. அமைதியை விரும்பும் குடிமக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கும் சக்திகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும். நாட்டில் ஜனநாயகத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.  இன்று மகாராஷ்டிராவிலும் நாட்டிலும் சில குழுக்களால் சாதி மற்றும் மதத்தின் பெயரால் சமூகத்தினரிடையே பிளவு ஏற்படுகிறது. எனது போராட்டம் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரானது, நான் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவேன்” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சூளுரைத்துள்ளார்.

‘பாஜகவுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை’

“இன்று நான் இதை கேமிரா முன் சொல்கிறேன்; மகாராஷ்டிரா முதல்வர் மாறப்போகிறார். ஏக்நாத் ஷிண்டே நீக்கப்படுவார். ஏக்நாத் ஷிண்டே மற்றும் 16 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம்  செய்யப்பட உள்ளனர். சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸை பாஜக உடைக்கிறது.  ஆனால், இது அவர்களுக்கு (பாஜக) எந்த பயனும் அளிக்காது. 2024 வரை ஷிண்டே முதல்வ ராக இருப்பார். மகாராஷ்டிராவில் 2024 தேர்தலை நாங்கள் (காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) ஒன்றாக எதிர்கொள்வோம்” என்று சிவ சேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

ஆட்சிக் கவிழ்ப்பு: உச்சநீதிமன்றம் தலையிட கோரிக்கை

“பாஜகவின் பதவித் தூண்டுதலால் கவிழ்க்கப்பட்ட எதிர்க்கட்சி அரசாங்கங்கள் விவரம்:- உத்தரகண்ட் அரசு (2016); அருணாச்சல பிரதேச அரசு (2016); கர்நாடக அரசு (2019);  மத்தியப்பிரதேச அரசு (2020); மகாராஷ்டிர அரசு (2022). இப்போது இதையெல்லாம் சட்டம் அனு மதிக்கிறதா? இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்” என்று ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பீகாரில் ஜேடியுவையும் பாஜக உடைக்கும்: அத்வாலே சூசகம்

“பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் மீது ஜேடியு எம்எல்ஏ-க்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்ற னர். ஜேடியு எம்எல்ஏ-க்களும் மூத்த தலைவர்களும் ராகுல் காந்தியை, நிதிஷ்குமார் தலை வராக கொண்டாடுவதை ஏற்கவே இல்லை; அதேபோல மாநிலத்தில் ஆர்ஜேடி-யின் தேஜஸ்வி யையும் அவர்கள் ஏற்கவில்லை. இதனால் நிச்சயம் கலகம் வரும். அதேபோல உத்தரப்பிரதேச மாநிலத்திலும் அகிலேஷூடன் மல்லுக்கட்டும் ஆர்.எல்.டி தலைவர் ஜெயந்த் சவுத்ரியும் பாஜக அணிக்கு வருவார்” என்று பாஜக-வின் சேவகராகவே மாறிப்போன இந்திய குடியரசுக் கட்சியின் (அத்வாலே) பிரிவு தலைவர் ராம்தாஸ் அத்வாலே ஆருடம் தெரிவித்துள்ளார்.

நிதிஷ் குமாரை நாங்கள் ஏற்க மாட்டோம்: சுஷில் குமார் மோடி

“நிதிஷ் குமாரை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்க மாட்டோம்” என்று பாஜக எம்.பி. சுஷில் குமார் மோடி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். “நிதிஷ் குமாரை  எக்காரணம் கொண்டு ஏற்க மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆரம்பத்தி லேயே தெளிவாக கூறினார். பாஜக-வின் வாசலில் நிதிஷ் குமார் மூக்கை தேய்த்தாலும் அவரை ஏற்க மாட்டோம். பாஜக அவரது சாமான்களை எடுத்துச் செல்லாது” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தி திணிப்பு நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானது: வைகோ 

சென்னை, ஜூலை 4- ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- தில்லியில் நடந்த இந்தி ஆலோ சனைக் குழு கூட்டத்தில், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசும் போது, “நமது தேசிய மொழியின் முதன்மையைப் புரிந்து கொள்வது முக்கியம். ஏனெனில்  இது நமது உணர்வுகளை வெளிப் படுத்த உதவுகிறது. நமது ஒற்றுமைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஒரு பாலத்தை வழங்குகிறது. மாநில மொழிகளை நாம் பேசுவதற்கு பயன்படுத்தலாம். ஆனால் இந்தியை தேசிய மொழியாக மதிக்க வேண்டும். நமது தேசிய மற்றும்  கலாச்சார ஒற்றுமையின் அடையாள மாக இந்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரிக்கிறது”. என்று குறிப்பிட் டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்  பெற்றுள்ள எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் தேசிய மொழிகள் தான். அவற்றை மக்கள் பேசுவதற்கான மொழிகள் மட்டுமே என்று ஒன்றிய அமைச்சர் சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியது. ஒன்றிய பாஜக அரசு இந்தி மொழியை  மட்டும் தேசிய மொழி என்று அங்கீகரிப்பதும், இந்தி மொழியைத் திணிப்பதும் நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானதாகும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று இந்து  ராஷ்ட்ர செயல் திட்டத்தை பாஜக அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது  ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் வேலையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

பொது சிவில் சட்டம் இனி காலதாமதம் ஆகாது : ஜகதீப் தன்கர்

புதுதில்லி, ஜூலை 4 - “நாடு முழுவதும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என  இந்திய அரசியலமைப்பு சட்டம் 44 கூறு கிறது. அப்போதுதான் இந்திய அரசிய லமைப்பை உருவாக்கியவர்களின் சிந்தனை செயல்பாட்டிற்கு வரும். பொதுசிவில் சட்டத்தை கொண்டுவர நேரம் வந்துவிட்டது. இனி பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த எந்த தடையும் இல்லை, இனி காலதாமதமும் ஏற்படாது” என குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: நான்கு பேர் கைது

புதுதில்லி, ஜூலை 4- தில்லியில் நீட் தேர்வில் மோசடி செய்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ள னர். இந்தக் கும்பல், லட்சக்கணக் கில் பணம் பெற்றுக் கொண்டு மற்றவர்களுக்காகத் தேர்வு எழுதி யது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தில்லி காவல்துறையினர் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் நரேஷ் பிஷ்ரோய் என்பவர் இந்தக் கும்ப லின் தலைவராகச் செயல்பட்டுள் ளார். நீட் தேர்வில் மோசடி செய்ய, இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் பணம் தருவதாகக் கூறி ஆட்களைச் சேர்த்துள்ளார். பிறகு, பல்வேறு இடங்களில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக நடந்த தேர்வுகளில் மற்றவர்களிடம் தலா  ரூ.7 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு, தனது கும்பலைச் சேர்ந்த மாணவர்கள் மூலம் தேர்வு  எழுத வைத்துள்ளார் என்றனர். ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக பிஷ்ரோய், சஞ்சு யாதவ், மஹாவீர், ஜிதேந்திரா உள்ளிட்ட நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பிஷ்ரோய் இரண்டாமாண்டு தேர்வில் கலந்துகொண்டபோது கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் தில்லி எய்ம்ஸில் கதி ரியக்கவியல் முதலாம் ஆண்டு  மாணவர் சஞ்சு, மற்றொரு வருக்குப் பதிலாக நீட் தேர்வு எழுதி சிக்கிக் கொண்டார். தில்லி எய்ம்ஸ் மாணவர்கள் மகாவீர், ஜிதேந்திரா ஆகியோர் நாக்பூரில் கைது செய்யப்பட்டனர்.
 




 


 

;