states

img

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,செப்.6- தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இது தொடர்பாக சென்னை  வானிலை ஆய்வு மையம் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- தமிழ்நாட்டு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  காரணமாக, புதனன்று (செப்.7) தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீல கிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக் கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல், செப்.8ஆம் தேதி  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும், செப்.9, 10ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்க ளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

;