சென்னை, ஆக.6- தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம், திருச்சி, சிவ கங்கை, மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம் செய்யப்பட் டுள்ளனர். மதுரை அமலாக்கத்துறை எஸ்.பி.யாக இருந்த வருண்குமார் திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியம னம் செய்யப்பட்டுள்ளார். பொரு ளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. அன்கிட் சென்னை தி.நகர் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தி.நகர் உதவி ஆணையராக இருந்த அருண் கபிலன் சேலம் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப் பட்டுள்ளார். சேலம் மாவட்ட எஸ்.பி. சிவக்குமார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்கு வரத்து உதவி ஆணையர் சக்தி வேல் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக நியமனம் செய்யப் பட்டுள்ளார்.