states

மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து அரசுப்பேருந்தில் மோதியது: 9 பேர் பலி

பாலக்காடு, அக். 6- திருச்சூர்-பாலக்காடு நெடுஞ் சாலையில் வடக்கஞ்சேரி அருகே கேஎஸ்ஆர்டிசி பேருந்து மீது சுற்றுலா  பேருந்து மோதியதில் 9 பேர் உயி ரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடை ந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 10 பேர் ஆபத்தான நிலையில் உள்ள னர். உயிரிழந்தவர்களில் மூன்று மாண வர்களும் அடங்குவர். எர்ணாகுளம் வெட்டிக்கல் மார்  பாசிலின் வித்யாநிகேதன் பள்ளி மாண வர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்தே விபத்துக்குள்ளானது. அஞ்சு மூர்த்தி மங்கலம் அருகே வியாழக் கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. மாணவர்களுடன் ஊட்டிக்கு சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து கொட்டாரக்கரையில் இருந்து கோவைக்கு சென்றுகொண்டிருந்த கேஎஸ்ஆர்டிசி பேருந்தின் பின்புறம் மோதியதால் இரண்டு பேருந்து களும் கவிழ்ந்தன.

சுற்றுலா பேருந்து மணிக்கு 97 கி.மீட்டர் என்கிற மித மிஞ்சிய வேகத்தில் ஓட்டப்பட்டதே விபத்துக்கான காரணமாக கண்ட றியப்பட்டுள்ளது. சுற்றுலாப் பேருந்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளைச் சேர்ந்த  42 மாணவர்களும், ஐந்து ஆசிரியர் களும் இருந்தனர். இறந்தவர்களில் உடற்கல்வி ஆசிரி யர் வி.கே. விஷ்ணு (33), மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அஞ்சனா அஜித் (17), சி.எஸ்.இம்மானுவேல் (17), பத்தாம் வகுப்பு மாணவர்கள் பான் தாமஸ் (15), தியா ராஜேஷ் (15), எல்னா ஜோஸ் (15) ஆகியோர் சுற்றுலா வாக னத்தில் இருந்தவர்கள். திருச்சூரைச் சேர்ந்த ரோஹித் ராஜ் (24), ஓ. அனூப் (22), கொல்லத்தைச் சேர்ந்த தீபு ஆகி யோர் கேஎஸ்ஆர்டிசி பயணிகள் என  அடையாளம் காணப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய சுற்றுலா பேருந்தின் ஓட்டுநர் காயங்களுடன் தப்பி ஓடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அவர்களை அமைச்சர்கள் எம்.பி.ராஜேஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறி னர். இறந்தவர்களின் சடலங்கள் வியாழ னன்று பகல் 12 மணிக்கு முன்பே கூராய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

முதல்வர் இரங்கல்

வடக்கஞ்சேரியில் நடந்த வாகன  விபத்து யாவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் ஒன்பது பேர்  பலியாகியுள்ளனர். பலர் படுகாய மடைந்துள்ளனர். இறந்தவர்களில் பாட சாலையிலிருந்து பொழுதுபோக்கிற்கு சுற்றுலா சென்ற சிறுவர்களும் உள்ள டங்குகின்றனர். விபத்துக்கான கார ணம் குறித்து விசாரிக்கப்படும். போக்கு வரத்து விதிமீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அரசு அமைப்புகள் முழுமையாக விழிப்புண ர்வுடன் செயல்பட்டு வருகின்றன. நிவாரணப் பணிகளை அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரடியாக முன்னெடுத் துச் செல்வதாகவும் முதல்வர் தெரி வித்தார்.