வயநாடு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1 இலட்சத்தை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி -ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் எஸ்.ராமமூர்த்தி, மாநிலப் பொருளாளர் மகாலிங்கம், மாநிலத் துணைத் தலைவர் திரவியம், மாநிலச் செயலாளர்கள் மோகன்ராஜ், கோமதிநாயகம், கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் வர்கீஸ், துணைத் தலைவர் சண்முகநாதன் மற்றும் கரூர் மாவட்ட மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.