states

கேரள உள்ளாட்சி தேர்தல் பல இடங்களில் லீக் தனியாக போட்டி சிபிஎம்மில் இணையும் லீக் நிர்வாகிகள்

திருவனந்தபுரம், நவ.23- திருவனந்தபுரம் மாவட் டத்தில் முஸ்லிம் லீக்கை காங் கிரஸ் கைவிட்டது. யுடிஎப் அமைப்புக்கு வெளியே போட்டியிட்டு பழிவாங்க முஸ்லிம் லீக் தயாராகி வரு கிறது. மற்றொருபுறம் யூத் லீக் தொகுதி பொதுச் செய லாளர் சஜாத் பூவாச்சல் உட்பட பலர் சிபிஎம்மில் இணைந்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலுக் கான இடப்பகிர்வு குறித்த விவாதம் யுடிஎப்பில் கடுமை யானதால், லீக் வேட்பாளர்க ளின் பட்டியலை மாநில செய லாளர் கே.எஸ்.ஹம்சா மாவட்ட கன்வீனர் பிமபள்ளி ரஷீத்தின் உதவியுடன் வெளி யிட்டார். யூத் லீக் மாவட்ட பொதுச் செயலாளர் பைஸ் பூவாச்சல் உள்ளிட்ட முக்கிய நபர்கள் காங்கிரசுக்கு எதிராக போட்டியிடுகின் றனர்.

மாவட்டத்தில் லீகிற்கு மிகவும் செல்வாக்கு உள்ள பூவச்சல் பஞ்சாயத்தில் பெரும்பாலான வார்டுகளில் லீக் வேட்பாளர்கள் உள்ள னர். வர்க்கலா நகராட்சி, எடவா, நெட்டூர், நாவாயிகுளம் பஞ்சாயத்துகளில் காங் கிரசுக்கு எதிராக லீக் போட்டி யிடுகிறது. இது வரும் நாட்க ளில் யுடிஎப்-க்குள் போரை தீவிரப்படுத்தும். மாநக ராட்சி, நகராட்சி, கிராம பஞ்சா யத்து, ஒன்றிய பஞ்சாயத்து மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ஆகியவற்றில் தாங்கள் நிராகரிக்கப்பட்டதாக லீக் புகார் தெரிவித்துள்ளது. 100 வார்டுகள் கொண்ட திருவ னந்தபுரம் மாநகராட்சியில், ஐந்து வார்டுகள் மட்டுமே லீக்கிற்கு வழங்கப்பட்டன. மாவட்ட பஞ்சாயத்தில் ஒரே ஒரு இடம் மட்டும். பஞ்சா யத்துகளில் 15 இடங்கள் மட்டுமே லீகிற்கு. மாவட்ட பஞ்சாயத்தின் கனியாபுரம் பிரிவில் ஒரு லீக் தலைவரின் மகள் வேட்பாளர். இதிலும், லீகில் ஒரு பகுதியினருக்கு அதிருப்தி உள்ளது.

பிமபள்ளி ரஷீத் மீதான புகார் என்னவென்றால், யுடிஎப் மாவட்ட அமைப்பாளராக இருந்தபோதிலும், அவர் தகுதியான இடத்தை வாங்க வில்லை என்பதாகும். அத னால்தான், மாவட்ட பொறுப் பானரான அவருக்கு பதிலாக மற்றொரு மாநில செயலாளர் கே.எஸ்.ஹம்சா நியமிக்கப் பட்டு வேட்பாளர்கள் அறி விக்கப்பட்டனர். யுடிஎப்பில் ஒரு பெரிய பிளவுக்கு வழிவகுக்கும் வகையில் யூத் லீகின் மாவட்ட பொதுச் செயலாளரே போட்டியிடுகிறார்.

அண்மை யில், பூவச்சல் பஞ்சாயத்து யுடிஎப் தேர்தல் குழுவின் அலுவலகத்தில் இருந்த லீக் தலைவர்களின் படங்கள் லீக் நிர்வாகிகளாலேயே மாற்றப்பட்டது. முன்னதாக பூவாச்சலில், பல லீக் உறுப் பினர்கள் தங்கள் குடும்பத்தி னருடன் சிபிஎம் இல் சேர முடிவு செய்திருந்தனர். இதற்கு யூத் லீக் தொகுதி பொதுச் செயலாளர் சஜாத் பூவாச்சல் தலைமை தாங்கி னார். லீக்கின் ஸ்தாபகத் தலைவரின் குடும்பமும் இதில் அடங்கும். லீக் தனது சொந்த வேட்பாளரை வர்கலா நகராட்சியில் பல வார்டுகளில் நிறுத்தி யுள்ளது.

;