திருவனந்தபுரம்,ஜுலை7- வங்கித் துறை முழுவது மாக டிஜிட்டல் மயமாக்கப் படும் முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் இலக்கை அடைய மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு முடிவு செய்துள்ளது. இந்த விரி வான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாநில அளவி லான பிரச்சார சின்னத்தை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை அனைவரும் செயல்படுத்து வதே இதன் நோக்கம். சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அனை வருக்கும் அறிமுகப்படுத்தப் படும். திருச்சூர் மாவட்டத் தில் சோதனை அடிப்படை யில் செயல்படுத்தப்பட்டு பின்னர் கோட்டயத்தில் செயல் படுத்தப்பட்ட இத்திட்டம் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த பிரச்சாரத்தில் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகம், அரசு அமைப்புகள் மற்றும் தன்னா ர்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படும். கிளை அளவில், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பிரச்சாரம் விரிவுபடுத்தப் படும். வாடிக்கையாளர் குறைந்தபட்சம் ஒரு டிஜிட் டல் சேவையையாவது பயன்படுத்த முடியும்.