states

img

‘காவல்துறையில் குற்றவாளிகள் நீடிக்க முடியாது’

கேரள காவல்துறையில் குற்றவாளிகளை சகித்துக்கொள்ள மாட்  டோம் என்பதே அரசின் கொள்கை  என அம்மாநில முதல்வர் பினராயி  விஜயன் கூறியுள்ளார்.

நல்ல சட்டம் ஒழுங்கு அமலாக் கம், குற்றங்களை கண்டறிந்து தடுப்  பதில் சிறந்து விளங்குவது, நவீன  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொது சேவையை வழங்குவது, போதைப்பொருள் பரவலை தடுப்ப தில் உறுதி என இவை அனைத்தும்  இன்றைய கேரள காவல்துறையின் குணாதிசயங்கள். இந்த நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இன்று கேரள காவல்துறையில் தெரி கிறது.

மக்கள் நலன் சார்ந்த சேவை யை உறுதி செய்வதில் கேரள காவல்துறை முன்னேறி வருகிறது.  இந்நிலையில், சில அதிகாரிகள்  காவல்துறையின் நம்பகத்தன்மை யை கெடுக்கும் செயல்களில் ஈடுபடு வது கவனத்துக்கு வருகிறது. கிரி மினல் வாசனை கொண்ட இத்த கைய அதிகாரிகளை காவல்துறை யில் இருந்து படிப்படியாக வெளி யேற்ற அரசு கடுமையான நடவ டிக்கைகளை எடுத்துள்ளது.

குற்ற வழக்குகளில் தொடர்பு டைய அனைத்து அதிகாரிகள் மீதும்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு துறை ரீதியான நட வடிக்கையும் எடுக்கப்பட்டு வரு கிறது. குற்றங்களின் தீவிரத்தின்  அடிப்படையில் தண்டனை நட வடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறாக கடந்த 8 வருடங்களில்  நடைமுறைகள் நிறைவடைந்த நிலையில் 108 அதிகாரிகள் சேவை யில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பு அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வ தாகவும் முதல்வர் தெரிவித்துள் ளார்.

கேரள சட்டமன்றத்தில் காங்கி ரஸ் கட்சியின் உறுப்பினர் அன்வர்  சதாத் கொண்டு வந்த கவன ஈர்ப்பு  தீர்மானத்துக்கு முதல்வர் சார்பில் பதிலளித்து அமைச்சர் வீணா ஜார்ஜ் இதை தெரிவித்தார்.