states

img

விவசாயிகளை பாஜக அரசு மதிக்கவில்லை - பினராயி விஜயன் 

விவசாயிகளை பாஜக அரசு மதிக்கவில்லை என்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 28வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிர் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக  40க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக்களத்திலேயே உயிரிழந்துள்ளனர். தில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் இடதுசாரிகள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளமாநிலம் திருவனந்தபுரத்தில் விவசாயிகள் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கேரளமுதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் நம் நாடு பல வரலாற்று போராட்டங்களை கொண்டுள்ளது. அதில் தில்லி விவசாயிகள் போராட்டம் மிகப்பெரியதாக நடைபெற்று வருகிறது. நாடு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் மத்திய பாஜக அரசு மதிக்கவில்லை. பேராசிரியர் எம்.எஸ். சுவாமி நாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்துவதாக பாஜக அரசு கூறியது. அவ்வாறு கூறிய பாஜகதான் இப்போது நாட்டை ஆளுகிறது. ஆனால் தாங்கள் கூறியதை அமல்படுத்த முடியவில்லை. தேசிய விவசாயிகள் தினம் இன்று கொண்டாடப்படும் நாளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார். 
 

;