திங்கள், மார்ச் 1, 2021

states

கொரோனா அச்சம்: குஜராத் கோயிலில் விழுந்து கும்பிட தடை 

கொரோனா அச்சத்தால் குஜராத் கோயில்களில் விழுந்து கும்பிட தடைவிதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பேரிடரைத் தொடர்ந்து குஜராத்தில் உள்ள கோயில்களில், கோயிலை வலம் வந்த பிறகு, விழுந்து வணங்கும் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பதிலாக பக்தர்கள் அனைவரும் நின்று கையெடுத்து கும்பிட மட்டுமே செய்யலாம். அதுபோலவே, வெளியிலிருந்து பிரசாதம் செய்து கொண்டு வந்து கோயிலுக்குள் பக்தர்களுக்கு விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
மத்திய அரசின் அறிவுறுத்தல்களின்படி, கோயில்களில் விழுந்து கும்பிட தடை விதிக்கப்பட்டிருப்பதாக குஜராத்தில் உள்ள சோமநாதர் திருக்கோயிலின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

;