தனியார் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே 4ஜி சேவையை தொடங்கிய நிலையில், பிஎஸ்என்எல்-இன் 4ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே 4ஜி சேவை வழங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. தற்போது இந்த நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் 4ஜி சேவையை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், புதிதாக அமைக்கப்பட்ட 97,500 கைப்பேசி கோபுரங்களை காணொலி வாயிலாக தொடக்கி வைத்தார்.
