states

img

ரூ1.49 லட்சம் மின் கட்டணம் - அதிர்ச்சியடைந்த ஆந்திர தொழிலாளி

ஆந்திராவில் கூலித் தொழிலாளியின் கூரைக்கு ரூ1.49 லட்சம் மின்கட்டணம் வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கனேகால் பகுதியில் வாழ்ந்து வருபவர் கே.நாகம்மா, அவர் தனது கூரை வீட்டில் ஒரு மின்விசிறி, தொலைக்காட்சி, ஒரு மின்விளக்கு வைத்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு வழக்கமாக ரூ. 100 என அளவிற்கு மாத மின்கட்டணம் செலுத்துவது வழக்கம். அதுவும் குறைந்தபட்ச மின் கட்டணம் ரூ.50, வாடிக்கையாளர் கட்டணம் ரூ.25, தாமதமாக கட்டுவதற்கு ரூ25  ஆகும்.
ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையிலான மின் கட்டணம் செலுத்த வில்லை. இதனால் ரூ500 முதல் ரூ.1000 வரும் என்ற நாகம்மா எதிர்பார்த்தார். ஆனால் அவரது வீட்டிற்கு ரூ.1,49,034  மின்கட்டணம் வந்துள்ளது. இதனால் நாகம்மா கடும் அதிர்ச்சியடைந்துள்ளர். 
இச்சம்பவம் குறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள் இது நிச்சயம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாஇருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். 

;