science

img

வணிக மயத்தின் அலங்கோலம்...! சீனாவை குறி வைக்குதா எலான் மஸ்க் திட்டம்...?

விண்வெளிக்கு சொந்தமாக செயற்கைக்கோள் அனுப்பி சாதனை புரிந்ததாக எலான் மஸ்கின் திட்டம் பேசப்பட்டு வருகை யில், மனித குலத்தை அச்சுறுத்தும் திட்டமாக அது மாறிவிட்டதா என்று விண்வெளி ஆய்வாளர்கள் பேசத் துவங்கியுள்ளனர். நடப்பாண்டில் ஜூலை 1 மற்றும் அக்டோபர் 21 ஆகிய இரண்டு நாட்களி லும் எலான் மஸ்க்கின் நிறுவனம் செலுத்தியுள்ள செயற்கைக்கோளிட மிருந்து தப்பிக்க சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் லாவகமாக திசையை மாற்றிக் கொண்டது. இல்லையென்றால் விண்வெளியில் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். ஜூலையில் நடந்த நிகழ்விலிருந்து எலான் மஸ்கின் ஸ்டார் லின்க் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. 

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று அதை சுற்றுலா வாக மாற்றி பெரும் பணத்தை ஈட்டும் நோக்கத்தில் இந்த நிறுவனத்தை எலான் மஸ்க் துவக்கினார். விண் வெளித் திட்டத்தில் இது பெரும் சாத னையாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், விண்வெளியில் இந்த நிறு வனம் ஏவியுள்ள செயற்கைக்கோள் அங்குள்ள நிலைமையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சுற்றி வரு கிறது. இத்தனைக்கும் சீனாவின் சர்வ தேச விண்வெளி நிலையத்தின் இருப்பு அனைவருக்கும் தெரிந்ததாகும்.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன செயற்கைக்கோளின் இந்த  ஆபத்தான செயல்பாடு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் விண்வெளி விவ காரத்துறை அலுவலகத்திடம் ஆவ ணங்களை சீனா தந்துள்ளது. அதில்  “ஸ்டார் லின்க்-1095 செயற்கைக்கோ ளும், சீனாவின் விண்வெளி நிலைய மும் மோதிக்கொள்ளும் சூழல் ஜூலை 1, 2021 அன்று ஏற்பட்டது. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நடவடிக்கை யை சீன நிலையம் எடுத்தது. இல்லை யென்றால் இரண்டும் ஒன்றின்மீது ஒன்று மோதியிருக்கும்” என்று குறிப் பிட்டுள்ளது. சீன இணையதளங்களில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. அந்த செயற்கைக்கோள் வெறும் குப்பைக் குவியல் என்று சிலரும், அவை அமெ ரிக்காவின் விண்வெளி ஆயுதங்கள் என்று சிலரும் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்க அரசு மற்றும் ராணு வத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட ஆயுதம்தான் எலான் மஸ்க் என்று சிலர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். 

;