science

img

உ.பி. மாநிலத்தின் நிலத்தடி நீரில் அதிக அளவில் ஆர்செனிக் கண்டறியப்பட்டுள்ளது

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2.34 கோடி மக்கள் வசிக்கும் கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், நிலத்தடி நீரில் அதிக அளவில் ஆர்செனிக் செறிவு இருப்பது தெரிய வந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 40 மாவட்டங்களின் நிலத்தடி நீரில், ஆர்செனிக் செறிவு அதிக அளவில் உள்ளது. பாலிபா, பாராபங்கி, கோரக்பூர், கஜபூர், கோண்டா, பைசாபாத் மற்றும் லக்கிம்பூர் கேரி ஆகிய பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும். பெரும்பாலான இப்பகுதிகள் கங்கை, ரப்தி மற்றும் ககாரா நதிகளை ஒட்டியே உள்ளன. அதே போல், ஷாஜஹான்பூர், உன்னோ, சந்தோளி, வாரணாசி, பிரதாப்கர், குஷினாகர், மவு, பால்பும்பூர், தியோரியா மற்றும் சித்தார்த்நகர் ஆகிய பத்து மாவட்டங்களின் நிலத்தடி நீரில், ஆர்செனிக் மாசுபாடு சற்று குறைவாகவே உள்ளன.   

மாநிலத்தின் 78 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். நீர்ப்பாசனம், குடிநீர், சமையல் மற்றும் பிற வீடுகள் பயன்பாட்டிற்கு நிலத்தடி நீரையே சார்ந்துள்ளனர். இந்நிலையில் பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் குழாய் வழங்காததால், நகரபுறத்தில் வாழ்பவர்களை விட கிராமப்புறங்களில் வாழ்பவர்களுக்கே இதன் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

இப்பகுதிகளில் இருந்து, நிலத்தடி நீர் மாதிரிகள் எடுத்து ஆர்செனிக் சோதனை கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் அதன் முடிவுகளை ஆய்வகத்தில் சரிபார்க்கப்பட்டன. மொத்தத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 1680 நிலத்தடி நீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த உள்ளீடுகள் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் ஆர்செனிக் மாசுபாடு உள்ள பகுதிகளை வரைபடமாக உருவாக்கி உள்ளனர்.

நிலப்பரப்பு, நீராவி ஆழம், இரசாயன மற்றும் உயிரியல் மண் அமைப்பு, வடிகால் அமைப்பு போன்றவற்றை கொண்டு நிலத்தடி நீரில் ஆர்செனிக் அளவை கணக்கிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, ஆய்வு மேற்கொண்ட சந்தர் குமார் சிங் கூறுகையில், ”உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கிணறுகள் பரவலாகப் பரிசோதனை செய்ய வேண்டிய என்பதின் அவசியத்தை இந்த ஆர்செனிக் மாசுபாடு குறித்த வரைபடம் குறிப்பிடுகிறது. நீண்டகாலமாக மக்கள் ஆர்செனிக் மாசுபாட்டால் பாதிக்கப்படுவதை தடுக்க இது உதவியாக இருக்கும். இந்த பாதிப்பு காணப்பட்ட பகுதிகளான, பால்யா, வாரணாசி, காசிப்பூர், கோரக்பூர், பைசாபாத் மற்றும் தியோரியாவில் ஆர்செனிக் மாசுபாடு காரணமாக ஒரு பொது சுகாதார நெருக்கடியை சந்திக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கிராமப்புற மக்கள் குடிநீருக்காக, குழாய் மற்றும் கிண்றுகளை சார்ந்து இருப்பதால், இந்த ஆர்சனிக் செறிவு காணப்படும் நிலத்தடி நீரின், பல இடங்களில் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த மாசுபாட்டால் தோல் புண்கள், தோல் புற்றுநோய், சிறுநீர்ப்பை, நுரையீரல் மற்றும் இதய நோய்கள் மற்றும் குழந்தைகளில் குறைந்த அறிவார்ந்த செயல்பாட்டை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.