மனிதர்கள் இதுவரை கண்டிராத நிறம் ஒன்றை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பச்சை மற்றும் நீல நிறம் கலந்த ஒரு அடர் நிறம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த நிறத்திற்கு 'ஓலோ' என்று பெயரிட்டுள்ளனர். இந்த நிறத்தை இயற்கையில் நாம் காண முடியாது. பொதுவாக, நம்முடைய கண்களில் S, M மற்றும் L ஆகிய மூன்று விதமான cone செல்கள் இருக்கின்றன: இதில் S cone செல்கள் நீலம் நிற ஒளியையும், M cone செல்கள் பச்சை நிற ஒளியையும், L cone செல்கள் சிவப்பு நிற ஒளியையும் உணர்கின்றன.
இந்த ஆராய்ச்சியில், oz என்ற கருவியை உருவாக்கி அதன் மூலம் சிறிய அளவிலான லேசர் துடிப்புகளை கண்களில் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கண்களில் உள்ள M cone செல்களை மட்டும் தூண்டப்பட்டு, இந்த புதிய நிறத்தின் அனுபவத்தை ஆராய்ச்சியாளர்கள் பெற்றுள்ளனர். ஓலோ நிறத்தை இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட 5 ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே கண்டுள்ளனர்.
இது போன்ற cone செல்கள் தூண்டுதல் மூலம் மனித கண்களின் நிறங்களை காணும் தண்மை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, இந்த அராய்ச்சி முதற்படியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.