பெல்ஜியம் நாட்டில் மனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான சுவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பெல்ஜியம் நாட்டில் உள்ள கெண்ட் நகரில், செயின்ட் பாவோ தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் தான் இந்தச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலங்களைப் புதைக்க அதிக இடம் தேவைப்பட்டதால் கல்லறையில் இருந்து இந்த எலும்புகள் அகற்றப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மேலும் அவற்றை தூக்கி எறிய முடியாததால் எலும்புகளை வைத்து ஒரு சுவரை உருவாக்கி இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.