கொரோனா தொற்று ஏற்பட்டுக் குணமான நபர்களுக்கு ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசியே போதுமானது என்று ஐ.சி.எம்.ஆர் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் , கொரோனா நோய்த் தொற்று பாதித்த 114 பேரிடம் ரத்த மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களைக் காட்டிலும் கொரோனா பாதித்து ,பின்னர் ஒரு டோஸ் கோவாக்சின் செலுத்தப்பட்டவர்களுக்கு நோய்யெதிர்ப்புசக்தி அதிகம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. எனினும், இந்த ஆய்வை உறுதி செய்ய இன்னும் அதிக மாதிரிகளை ஆய்வு செய்யவேண்டும் என்றும், அதன் பிறகே இந்த தகவலை உறுதியாக வெளியிடமுடியும் என்றும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.